தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Khuzaymah-2737

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மறுமை நாளில் ருக்குனுல் யமானி என்பது அபூ குபைஷ் மலையை விட பிரமாண்டமானதாக வரும். அதற்கு ஒரு நாவு, இரண்டு உதடுகள் இருக்கும். அதை முத்தமிட்டவர்களைப் பற்றி அது பேசும். அது அல்லாஹ்வின் வலது கையாகும். அதைக் கொண்டு அல்லாஹ் படைப்பினங்களை முஸாஃபஹா செய்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(ibn-khuzaymah-2737: 2737)

بَابُ ذِكْرِ الدَّلِيلِ عَلَى أَنَّ الْحَجَرَ إِنَّمَا يَشْهَدُ لِمَنِ اسْتَلَمَهُ بِالنِّيَّةِ دُونَ مَنِ اسْتَلَمَهُ نَاوِيًا بِاسْتِلَامِهِ طَاعَةَ اللَّهِ وَتَقَرُّبًا إِلَيْهِ، إِذِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَعْلَمَ أَنَّ لِلْمَرْءِ مَا نَوَى

ثنا الْحَسَنُ الزَّعْفَرَانِيُّ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ الْمُؤَمَّلٍ، سَمِعْتُ عَطَاءً يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

يَأْتِي الرُّكْنُ يَوْمَ الْقِيَامَةِ أَعْظَمَ مِنْ أَبِي قُبَيْسٍ لَهُ لِسَانٌ وَشَفَتَانِ يَتَكَلَّمُ عَنْ مَنِ اسْتَلَمَهُ بِالنِّيَّةِ، وَهُوَ يَمِينُ اللَّهِ الَّتِي يُصَافِحُ بِهَا خَلْقَهُ


Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-2737.
Ibn-Khuzaymah-Shamila-2737.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-2561.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25384-அப்துல்லாஹ் பின் முஅம்மல் என்பவர் பற்றி இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஆகியோர் கூறியுள்ளனர். ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்களும் கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 6, பக்கம்: 42). எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
  • ஹஜருல் அஸ்வத், ருக்குனுல் யமானீ ஆகியவை அல்லாஹ்வின் வலது கை என்ற கருத்தில் வரும் அனைத்தும் செய்திகளும் பலவீனமானவையாகும். எனினும் ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகியவற்றை முத்தமிட வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்மான நபிமொழிகள் உள்ளன…

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-6978 , இப்னு குஸைமா-2737 , அல்முஃஜமுல் அவ்ஸத்-563 , ஹாகிம்-1681 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.