ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரான) எங்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது எங்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழுவித்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “(மஃக்ரிப் தொழுகையின்) இந்த இரண்டு ரக்அத் (பின் சுன்னத்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)
(இப்னுமாஜா: 1165)حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ:
أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَنِي عَبْدِ الْأَشْهَلِ، فَصَلَّى بِنَا الْمَغْرِبَ فِي مَسْجِدِنَا، ثُمَّ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1165.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1155.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26982-அப்துல்வஹ்ஹாப் பின் ளஹ்ஹாக் என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், ஹதீஸ்களை திருடுபவர் அதாவது மற்றவர்களின் ஹதீஸ்களை தன்னுடைய ஹதீஸாக அறிவிப்பவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/637)
- மேற்கண்ட செய்தியை இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்களிடமிருந்து அபுல்யமான்-ஹகம் பின் நாஃபிஃ அவர்கள் தான் அறிவித்துள்ளார். (பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-4295)
எனவே இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-23624 .
சமீப விமர்சனங்கள்