அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று (முதலில்) இரண்டு ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவிப்பார்கள். பின்னர் (தொழுகையை முடித்து) ஸலாம் கொடுத்ததும் மக்களை முன்னோக்கி (உரை நிகழ்த்தியபடி) நிற்பார்கள். மக்கள் (தொழுத இடத்தில் அப்படியே) அமர்ந்திருப்பார்கள். (அன்றைய உரையில்) ‘தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்’ என்று கூறுவார்கள்.
அப்போது மக்களில் (ஆண்களைவிட) பெண்களே அதிகமாக (தங்கள்) காதணிகளையும், மோதிரங்களையும் இன்ன பிறவற்றையும் தர்மம் செய்வார்கள். ஏதேனும் படைப்பிரிவை அனுப்ப எண்ணியிருந்தால் அதை மக்களிடம் கூறுவார்கள். அவ்வாறு (எண்ணம் ஏதும்) இல்லாவிட்டால் (உரையை முடித்ததும்) திரும்பிச் சென்றுவிடுவார்கள்.
(இப்னுமாஜா: 1288)حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: أَخْبَرَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْعِيدِ، فَيُصَلِّي بِالنَّاسِ رَكْعَتَيْنِ، ثُمَّ يُسَلِّمُ فَيَقِفُ عَلَى رِجْلَيْهِ فَيَسْتَقْبِلُ النَّاسَ وَهُمْ جُلُوسٌ، فَيَقُولُ: «تَصَدَّقُوا تَصَدَّقُوا» فَأَكْثَرُ مَنْ يَتَصَدَّقُ النِّسَاءُ، بِالْقُرْطِ وَالْخَاتَمِ وَالشَّيْءِ، فَإِنْ كَانَتْ لَهُ حَاجَةٌ يُرِيدُ أَنْ يَبْعَثَ بَعْثًا يَذْكُرُهُ لَهُمْ وَإِلَّا انْصَرَفَ
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1278.
Ibn-Majah-Shamila-1288.
Ibn-Majah-Alamiah-1278.
Ibn-Majah-JawamiulKalim-1278.
சமீப விமர்சனங்கள்