தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1550

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள், இறந்தவரின் உடல் குழிக்குள் வைக்கப்படும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

அபூகாலிதின் வேறு அறிவிப்பில் இறந்தவரின் உடல் உட்குழிக்குள் வைக்கப்படும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா சுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ என்று கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது.

ஹிஷாமின் அறிவிப்பில் ‘பிஸ்மில்லாஹி வ ஃபீ ஸபீலில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்’ என்று கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது.

(இப்னுமாஜா: 1550)

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ:

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُدْخِلَ الْمَيِّتُ الْقَبْرَ، قَالَ: «بِسْمِ اللَّهِ، وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ» وَقَالَ أَبُو خَالِدٍ مَرَّةً: إِذَا وُضِعَ الْمَيِّتُ فِي لَحْدِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ» ، وَقَالَ هِشَامٌ فِي حَدِيثِهِ: «بِسْمِ اللَّهِ، وَفِي سَبِيلِ اللَّهِ، وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1550.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1539.




إسناد ضعيف فيه الليث بن أبي سليم القرشي وهو ضعيف الحديث

إسناده حسن رجاله ثقات عدا سليمان بن حيان الجعفري وهو صدوق حسن الحديث ، والحجاج بن أرطاة النخعي وهو صدوق كثير الخطأ والتدليس

  • இதன் முதல் அறிவிப்பாளர்தொடரில் வரும் லைஸ் பின் ஸுலைம் பலவீனமானவர்.
  • இரண்டாவது அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் அதிகம் தவறிழைப்பவர், தத்லீஸ் செய்பவர். நாஃபிஉ அவர்களிடம் நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க : அபூதாவூத்-3213 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.