தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1574

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி)

(இப்னுமாஜா: 1574)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو بِشْرٍ قَالَا: حَدَّثَنَا قَبِيصَةُ، ح وحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلَانِيُّ قَالَ: حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، وَقَبِيصَةُ كُلُّهُمْ عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَّانَ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، قَالَ:

«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زُوَّارَاتِ الْقُبُورِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1563.
Ibn-Majah-Shamila-1574.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1563.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 

 


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عبد الرحمن بن بهمان அப்துர்ரஹ்மான் பின் பஹ்மான் என்பவர் பற்றி இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இஜ்லி போன்றோர் மட்டுமே பலமானவர் என்று கூறியுள்ளனர். இவர்கள் அறியப்படாதவர்களையும் நம்பகமானவர்கள் பட்டியலில் சேர்ப்பதால் இவரின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை.

  • மேலும் இவரிடமிருந்து அப்துல்லாஹ் பின் உஸ்மான் என்பவர் மட்டுமே தனித்து அறிவிக்கிறார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

3 . இந்தக் கருத்தில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …


மேலும் பார்க்க: திர்மிதீ-1056.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.