தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான்.

ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 2)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَخُذُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ، وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَانْتَهُوا»


Ibn-Majah-Tamil-2.
Ibn-Majah-TamilMisc-2.
Ibn-Majah-Shamila-2.
Ibn-Majah-Alamiah-2.
Ibn-Majah-JawamiulKalim-2.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-37745-முஹம்மது பின் ஸபாஹ் என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் இவர் சில செய்திகளை பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்பதால் ஸதூக்-நம்பகமானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.

(நூல்: அல்காஷிஃப்-4/130, தஹ்தீபுத் தஹ்தீப்-3/592, தக்ரீபுத் தஹ்தீப்-1/855)

இந்த செய்தியை இவர் சரியாக அறிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: புகாரி-7288 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.