தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-223

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கஸீர் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது

நான் டமாஸ்கஸிலுள்ள ஒரு பள்ளிவாசலில் (நபித்தோழர்) அபுத்தர்தா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்தார். அவர், “அபுத்தர்தா! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த மதீனாவிலிருந்து உம்மிடம் வந்துள்ளேன். நீர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸை அறிவிப்பதாக எனக்குச் செய்தி கிடைத்தது. அந்த நபிமொழியைக் கேட்டறிவதற்காகவே உம்மிடம் நான் வந்துள்ளேன்” என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், “வேறெந்த வணிக நோக்கத்துடனும் நீர் வரவில்லையா?” என்று வினவினார்கள். அதற்கு அவர், “இல்லை” என்றார்.

“வேறெந்த நோக்கத்தோடும் வரவில்லையா?” என்று வினவ, அவர் “இல்லை” என்றார்.

அப்போது அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “யார் ஒரு பாதையில் கல்வியைத் தேடிச் செல்கிறாரோ, அவருக்கு சொர்க்கத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்.

கல்வியைத் தேடும் ஒருவர் மீது கொண்டுள்ள அன்பால் வானவர்கள் தம் சிறகுகளைத் தாழ்த்துகின்றனர். தண்ணீரில் வாழும் மீன்கள் உள்பட வானம் பூமியிலுள்ளோர் யாவரும் கல்வியைத் தேடுபவருக்காகப் பாவமன்னிப்புக் கோருகின்றனர்.

(வழிபாடுகளில் திளைத்திருக்கும்) பக்தியாளர் ஒருவரைவிடவும் கல்வியாளர் ஒருவருக்குள்ள சிறப்பு, (வானிலுள்ள) ஏனைய நட்சத்திரங்களை விட சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.

நிச்சயமாக (மார்க்க) அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர். இறைத்தூதர்கள் பொற்காசுகளையோ வெள்ளிக்காசுகளையோ சொத்தாக விட்டுச்செல்லவில்லை. அவர்கள் கல்வியையே விட்டுச்சென்றனர். யார் அந்தக் கல்வியைப் பெற்றுக் கொண்டாரோ அவர் நிறைவான பங்கைப் பெற்றுக்கொண்டார்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

(இப்னுமாஜா: 223)

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ عَاصِمِ بْنِ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ دَاوُدَ بْنِ جَمِيلٍ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ، قَالَ:

كُنْتُ جَالِسًا عِنْدَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ، فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ: يَا أَبَا الدَّرْدَاءِ، أَتَيْتُكَ مِنَ الْمَدِينَةِ، مَدِينَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُ بِهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ: فَمَا جَاءَ بِكَ تِجَارَةٌ؟ قَالَ: لَا، قَالَ: وَلَا جَاءَ بِكَ غَيْرُهُ؟ قَالَ: لَا، قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ، وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالْأَرْضِ، حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ، وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ، إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، إِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا، إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-223.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அபூதாவூத்-3641 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.