தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2865

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

எனக்குப் பிறகு சிலர் உங்களுக்குத் தலைவர்களாய் தோன்றுவார்கள். அவர்கள்நபிவழியை அழித்து பித்அத்தைத் தோற்றுவிப்பார்கள். தொழுகையை அதற்குரிய நேரத்தை விட்டும் தாமதப்படுத்துவார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே நான் அவர்களை அடைந்தால் என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் உம்மு அப்தின் மகனே அல்லாஹ்வுக்கு மாறு செய்பவருக்கு கீழ்ப்படிதல் இல்லை என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

(இப்னுமாஜா: 2865)

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، ح وحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«سَيَلِي أُمُورَكُمْ بَعْدِي، رِجَالٌ يُطْفِئُونَ السُّنَّةَ، وَيَعْمَلُونَ بِالْبِدْعَةِ، وَيُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مَوَاقِيتِهَا» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنْ أَدْرَكْتُهُمْ، كَيْفَ أَفْعَلُ؟ قَالَ: «تَسْأَلُنِي يَا ابْنَ أُمِّ عَبْدٍ كَيْفَ تَفْعَلُ؟ لَا طَاعَةَ، لِمَنْ عَصَى اللَّهَ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3601.
Ibn-Majah-Shamila-2865.
Ibn-Majah-Alamiah-3601.
Ibn-Majah-JawamiulKalim-2860.




….இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் வரும் அப்துல்லாஹ் பின் உஸ்மான் பின் குஸைம் அவர்களைப் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.

  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியிருந்தாலும் வேறு சில இடத்தில் நம்பகமானவர் என்றே கூறியுள்ளார்.
  • அபூ ஹாதிம், ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    போன்றோரின் கருத்துப்படி இவரின் ஹதீஸ்கள் ஹஸன் என்ற தரத்தில் அமைந்தவையாகும். 
  • இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    போன்றோரும் இந்த கருத்தில் உள்ளார்கள்.
  • அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இவர் இடம் பெரும் ஹதீஸை சரியானது என்றே கூறியுள்ளார்.

இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-3790 , இப்னு மாஜா-2865 , முஸ்னத் பஸ்ஸார்-1988 , அல்முஃஜமுல் கபீர்-10361 , குப்ரா பைஹகீ-5314 , 5336 ,

  • காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3788 , அஹ்மத்-3889 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1255 ,

2 comments on Ibn-Majah-2865

    1. அஸ்ஸலாமு அலைக்கும்
      More Info என்று போட்டிருந்தால், ”ஹதீஸ் தரம் குறித்து விமர்சனங்கள் உள்ளது. நாம் முடிவை அறிவிக்கவில்லை. இருக்கும் விமர்சனங்களை கீழே கொடுத்துள்ளோம்” என்று பொருள்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.