தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3205

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும் (மனிதர்களுக்கு தொல்லைதரும்) கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள்.

எந்த கூட்டத்தினர் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு “கீராத்கள்” (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வைத்திருக்கும் நாயைத் தவிர.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

(இப்னுமாஜா: 3205)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي شِهَابٍ، حَدَّثَنِي يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ، لَأَمَرْتُ بِقَتْلِهَا، فَاقْتُلُوا مِنْهَا، الْأَسْوَدَ الْبَهِيمَ، وَمَا مِنْ قَوْمٍ اتَّخَذُوا كَلْبًا، إِلَّا كَلْبَ مَاشِيَةٍ، أَوْ كَلْبَ صَيْدٍ، أَوْ كَلْبَ حَرْثٍ، إِلَّا نَقَصَ مِنْ أُجُورِهِمْ، كُلَّ يَوْمٍ، قِيرَاطَانِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3205.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3204.




மேலும் பார்க்க : திர்மிதீ-1486 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.