ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிரந்தரமாக மது அருந்துபவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
(இப்னுமாஜா: 3376)حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ قَالَ: حَدَّثَنِي يُونُسُ بْنُ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا يَدْخُلُ الْجَنَّةَ، مُدْمِنُ خَمْرٍ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3376.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3375.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47280-ஹிஷாம் பின் அம்மார் அறிவிக்கும் நான்கு செய்திகளை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் பதிவு செய்துள்ளார். இவரைப் பற்றி சிலர் பலமானவர் என்று கூறியிருந்தாலும் அதிகமானோர் ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளனர். இவர் வயதான காலத்தில் ஹதீஸை அறிவிக்கும் போதோ, அல்லது மற்றவர்கள் ஹதீஸை படித்துக் காட்டும்போதோ இவரை சோதிப்பதற்கு கேள்வி கேட்கப்பட்டால் அதற்கு ஆம் என்று கூறிவிடுவார். (இதற்கு ஹதீஸ்கலையில் தல்கீனை லகின, தலக்கன என்ற என்ற வார்த்தைக்கு அரபு அகராதியில் புரிந்துக் கொண்டார், விளங்கிக் கொண்டார் என்று பொருளாகும். லக்கன என்ற வார்த்தைக்கு விளக்கினார், சொல்லிக் கொடுத்தார் என்றும், தல்கீன் என்பதற்கு விளக்குதல், சொல்லிக் கொடுத்தல் என்றும் பொருளாகும். ஹதீஸ்கலை வழக்கில், ஹதீஸை அறிவிக்கும் ஒருவரிடம் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்தால் அதை சரியாக ஆராயாமல் அப்படியே கேட்டு ஹதீஸை அறிவிப்பவருக்கு தல்கீனை ஏற்பவர் அதாவது சொல்லிக் கொடுப்பதை அப்படியே ஏற்பவர் என்று கூறப்படும். மற்றவர்கள் சொல்லிக் கொடுப்பது பல காரணங்களுக்காக இருக்கலாம். 1 . ஹதீஸ் ஆசிரியரின் நினைவாற்றலை, அல்லது அவர் நூலில் எழுதிவைத்தவராக இருந்தால் அதை சரியாக தெரிந்து வைத்துள்ளாரா? பதிவு செய்துள்ளாரா என்பதை சோதிப்பதற்காக சிலர் அறிவிப்பாளர்தொடர்களை மாற்றியோ, அல்லது அவர் அறிவிக்காத ஹதீஸ்களைக் கூறி இது நீங்கள் அறிவித்தது என்று கூறியோ சொல்லிக் கொடுப்பார்கள். நல்ல நினைவாற்றல் உள்ளவர், ஹதீஸை எழுத்தில் பாதுகாத்து வைத்தவர் என்றால் இது நான் அறிவித்த ஹதீஸ்கள் அல்ல என்று கூறிவிடுவார். நினைவாற்றல் சரியில்லாதவர், ஹதீஸை எழுத்தில் பாதுகாக்காதவர் என்றால் அதை அப்படியே ஏற்றுவிடுவார். இதன் மூலம் ஹதீஸை அறிவிப்பவரின் தரத்தை சிலர் தெரிந்துக் கொள்வர். 2 . ஹதீஸ் ஆசிரியருக்கு பார்வை போனதாலோ அல்லது மறதி ஏற்பட்டதாலோ அல்லது வயதாகிவிட்டதாலோ மற்றவர்கள் சொல்லிக் கொடுப்பதை ஏற்கும் நிலை ஏற்படலாம். தல்கீனை ஏற்பவர்கள் இரு வகையாக உள்ளனர். 1 . மற்றவர்கள் சொல்லிக் கொடுத்தது சரியா என்று தனது நூலிலிருந்து பார்த்து அதை ஏற்பவர். இவரின் செய்திகள் ஏற்கப்படும். 2. மற்றவர்கள் சொல்லிக் கொடுப்பதைப்பற்றி எதையும் ஆராயாமல் அப்படியே கூறுபவர். இவருக்கு எப்போது இந்த நிலை ஏற்பட்டது; யாரின் ஹதீஸ்கள் விசயத்தில் இப்படி ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்து அந்த வகை ஹதீஸ்கள் ஏற்கப்படாது.ஏற்பவர் என்று கூறப்படும். அதாவது மற்றவர்கள் சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஏற்று பதில் கூறுவது போன்றவை இதில் அடங்கும். இத்தகையோர் சில நேரம் தான் அறிவிக்காத ஹதீஸைக் கூட தன்னுடயை ஹதீஸ் என்று கூறிவிடுவதுண்டு) - இவரைப் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர்; வயதான காலத்தில் சொல்லிக்கொடுப்பதை அப்படியே கூறுவார். எனவே இவர் முதிய வயதை அடைவதற்கு முன் அறிவித்தவை மிகச் சரியானவை என்று கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-7353, 1/1022)
மேலும் பார்க்க: அஹ்மத்-27484 .
சமீப விமர்சனங்கள்