தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-351

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்து சென்ற மனிதர் ஒருவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் சொல்லவில்லை. சிறுநீர் கழித்தப் பின் நபி (ஸல்) அவர்கள் (தமது இருகைகளையும் தரையில் அடித்து தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவி) தயம்மும் செய்த பின்னர் அவரின் ஸலாமுக்கு பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 351)

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا مَسْلَمَةُ بْنُ عُلَيٍّ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:

«مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ، فَلَمَّا فَرَغَ ضَرَبَ بِكَفَّيْهِ الْأَرْضَ، فَتَيَمَّمَ ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلَامَ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-351.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-345.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44459-மஸ்லமா பின் அலீ என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் பலவீனமானவர் என்றும் பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர் என்றும் கைவிடப்பட்டவர் என்றும் விமர்சிக்கிப்பட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/76, தக்ரீபுத் தஹ்தீப்-1/943)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

4 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-351 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3641 ,

சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-337 .

மேலும் பார்க்க: முஸ்லிம்-606 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.