தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3716

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் சந்தித்து பேசினால் அந்த நபர் திரும்பாதவரை நபி (ஸல்) அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். அவர்களிடம் கைகொடுத்தால் அந்த நபர் அவராகக் கையை விடும் வரை நபி (ஸல்) அவர்கள் தன் கையை எடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு முன்னால் முட்டுக்காலை மடக்கி அமர்பவர் யாரையும் பார்க்கவே முடியாது.

(இப்னுமாஜா: 3716)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِي يَحْيَى الطَّوِيلِ، رَجُلٌ مِنْ أَهْلِ الْكُوفَةِ، عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ:

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ، لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ، وَإِذَا صَافَحَهُ، لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا، وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3706.
Ibn-Majah-Shamila-3716.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3714.




إسناد ضعيف فيه زيد بن الحواري العمي وهو ضعيف الحديث

  • இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸைத் பின் ஹவாரீ அல்அம்மீ என்பவர் அறிவிக்கின்றார்.
  • இவரைப் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூசுர்ஆ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அலீ பின் மதீனீ ,இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அலீ இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மற்றும் பலர் கூறியுள்ளனர்.
  • மேலும் இந்த ஸைத் என்பாரிடமிருந்து عمران بن زيد அபூ யஹ்யா என்பவர் அறிவிக்கின்றார். இவரும் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3716 , அபூதாவூத்-4794 , திர்மிதீ-2490 , இப்னு ஹிப்பான்-6435 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.