பள்ளிவாசலில் தன்னுடைய முகம் குப்புற தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அவரை தன்னுடைய காலினால் தட்டி, “எழுந்து அமர்வீராக! இது நரகவாசிகளுடைய தூக்கமாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
(இப்னுமாஜா: 3725)حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ رَجَاءٍ، عَنِ الْوَلِيدِ بْنِ جَمِيلٍ الدِّمَشْقِيِّ، أَنَّهُ سَمِعَ الْقَاسِمَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يُحَدِّثُ عَنْ أَبِي أُمَامَةَ قَالَ
مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ نَائِمٍ فِي الْمَسْجِدِ مُنْبَطِحٍ عَلَى وَجْهِهِ، فَضَرَبَهُ بِرِجْلِهِ وَقَالَ: «قُمْ وَاقْعُدْ، فَإِنَّهَا نَوْمَةٌ جَهَنَّمِيَّةٌ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3715.
Ibn-Majah-Shamila-3725.
Ibn-Majah-Alamiah-3715.
Ibn-Majah-JawamiulKalim-3723.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18015-ஸலமா பின் ரஜா என்பவர் பற்றி இவர் ஒரு பொருட்டே அல்ல என்று இமாம் யஹ்யா பின் மயீன் விமர்சித்துள்ளார்…
- இவர் பலவீனமானவர் என இமாம் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
கூறியுள்ளார். துணைச் சான்றாக கொள்ள முடியாத ஹதீஸ்களை இவர் அறிவித்துள்ளார் என இமாம் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
விமர்சித்துள்ளார். (இதன் கருத்து மற்றவர்கள் அறிவிக்காத, அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என்பதாகும்) - தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இவர் பலமானவர்களின் வழியாக அரிதான செய்திகளை-தனித்து அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார். - அபூஸுர்ஆ, அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்றோர் இவரை சுமாரானவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/72, மீஸானுல் இஃதிதால்-3395, 2/189)
- மேலும் ராவீ-47738-வலீத் பின் ஜமீல் என்பவர் பற்றி இவர் வயோதிகர், ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் அபூஸுர்ஆ கூறியுள்ளார்.
- இவர் வயோதிகர், அல்காஸிம் என்பாரிடமிருந்து நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என இமாம் அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுல் கமால்-31/7, தஹ்தீபுத் தஹ்தீப்-4/315)
- மேலும் ராவீ-49276-யஃகூப் பின் காஸிப் என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/440)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
4 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-1188 , இப்னு மாஜா-3725 , அல்முஃஜமுல் கபீர்-7914 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2768 .
சமீப விமர்சனங்கள்