தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-394

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் கைகளில் தண்ணீர் ‎ஊற்றிக் கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 394)

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ وَجَابِرُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-394.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-388.




  • இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் ஒன்றில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ பலவீனமானவர் என்ற விமர்சனம் இருந்தாலும் இப்னு வஹ்ப் அவர்கள் இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது என்பதால் இது சரியானது.
  • மற்றொன்றில் வரும் ராவீ-11442-ஹர்மலா பின் யஹ்யா பற்றி சிலர் விமர்சித்திருந்தாலும் இவர் இப்னு வஹ்பின் செய்திகளை நன்கு அறிந்தவர் என இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறியுள்ளார் என்பதால் இதுவும் சரியானது…

மேலும் பார்க்க: புகாரி-162 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.