இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து கூறினார்கள்:
“முஹாஜிர்களே! ஐந்து விஷயங்களால் நீங்கள் சோதிக்கப்படும்போது (அவற்றை நீங்கள் அடையாமல் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) ஐந்து விளைவுகளைக் காண்பீர்கள்.
1 . ஒரு சமுதாயத்தில் மானக்கேடான செயல், பகிரங்கமாக வெளிப்பட்டால் அப்போது அவர்களிடையே கொள்ளை நோயும், அவர்களுக்கு முன் சென்றுவிட்ட மக்களிடம் இல்லாதிருந்த நோய்களும் பரவ ஆரம்பித்துவிடும்.
2 . ஒரு சமுதாயம் அளவையிலும் நிறுவையிலும் குறை(த்து மோசடி செய்)தால், அவர்கள் பஞ்சத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும், ஆட்சியாளர்களின் அநியாயத்தாலும் பிடிக்கப்படுவார்கள்.
3 . ஒரு சமுதாயம் தங்கள் செல்வத்தின் ஸகாத்தை வழங்காமல் தடுத்து வைத்துக்கொண்டால், அவர்களுக்கு வானத்திலிருந்து மழை வருவது தடுக்கப்பட்டு விடும். கால்நடைகள் மட்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கு மழை பொழிந்திருக்காது.
4 . ஒரு சமுதாயம் அல்லாஹ்வுடைய உடன்படிக்கையையும், அவனுடைய தூதருடைய உடன்படிக்கையையும் மீறிக் கொண்டிருந்தால், அல்லாஹ் அவர்களுக்கு வெளியிலிருந்து ஒரு எதிரியை ஏற்படுத்தி, அவர்கள் கைகளிலுள்ள சிலவற்றை அவன் கைப்பற்றுவான்.
5 . ஒரு சமுதாயத்தின் தலைவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்காமலும், அல்லாஹ் அருளியதை தேர்ந்தெடுக்காமலும் இருந்தால், அல்லாஹ் அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிடுவான்.
(இப்னுமாஜா: 4019)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ:
أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ، وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ: لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ، حَتَّى يُعْلِنُوا بِهَا، إِلَّا فَشَا فِيهِمُ الطَّاعُونُ، وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمُ الَّذِينَ مَضَوْا،
وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ، إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ، وَشِدَّةِ الْمَئُونَةِ، وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ،
وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ، إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ، وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا،
وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ، وَعَهْدَ رَسُولِهِ، إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ، فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ،
وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ، وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ، إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ “
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4019.
Ibn-Majah-Alamiah-4009.
Ibn-Majah-JawamiulKalim-4017.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்
2 . மஹ்மூத் பின் காலித்-அத்திமஷ்கீ
3 . ஸுலைமான் பின் அப்துர்ரஹ்மான் (அபூஅய்யூப்)
4 . காலித் பின் யஸீத் (இப்னு அபூமாலிக்)
5 . யஸீத் பின் அபூமாலிக்-யஸீத் பின் அப்துர்ரஹ்மான்
6 . அதாஉ பின் அபூரபாஹ்
7 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
சரியான ஹதீஸ் பார்க்க: ஹாகிம்-8623.
சமீப விமர்சனங்கள்