தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4114

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உடலின் ஒரு பகுதியை (தோளை)ப் பிடித்துக்கொண்டு, “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு;

உன்னை மண்ணறைவாசிகளில் ஒருவனாகக் கருதிக்கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இப்னுமாஜா: 4114)

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ:

أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِبَعْضِ جَسَدِي، فَقَالَ: «يَا عَبْدَ اللَّهِ كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ كَأَنَّكَ عَابِرُ سَبِيلٍ، وَعُدَّ نَفْسَكَ مِنْ أَهْلِ الْقُبُورِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4114.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-4112.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை; எனவே இவர் கைவிடப்பட்டுவிட்டார் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721)

இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியான “உன்னை மண்ணறைவாசிகளில் ஒருவனாகக் கருதிக்கொள்” என்ற கருத்து பலவீனமாகும்.

இந்தச் செய்தியின் முதல் பகுதியை முஜாஹித் அவர்களிடமிருந்து அஃமஷ் அவர்களும் அறிவித்துள்ளார். (பார்க்க: புகாரி-6416)

சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-6156 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.