தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4152

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும், (எனது மனைவி) ஃபாத்திமாவும் வெண்மைநிற கம்பளிப் போர்வையில் இருக்கும் சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.

இந்தக் கம்பளிப் போர்வையைும், இத்கிர் (எனும் நறுமணப்புல்) நிரப்பப்பட்ட ஒரு தோல் தலையணையையும், தோலாலான ஒரு தண்ணீர்க் குடுவையையும் திருமணச் சீர்ப்பொருள்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கொடுத்திருந்தார்கள்.

(இப்னுமாஜா: 4152)

حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَتَى عَلِيًّا، وَفَاطِمَةَ وَهُمَا فِي خَمِيلٍ لَهُمَا، وَالْخَمِيلُ: الْقَطِيفَةُ الْبَيْضَاءُ مِنَ الصُّوفِ، قَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَهَّزَهُمَا بِهَا، وَوِسَادَةٍ مَحْشُوَّةٍ إِذْخِرًا وَقِرْبَةٍ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4152.
Ibn-Majah-Alamiah-4142.
Ibn-Majah-JawamiulKalim-4150.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42155-முஹம்மது பின் ஃபுளைல் அவர்கள், அதாஉ அவர்களிடமிருந்து செவியேற்றது அதாஉ மூளைகுழம்பியபின் என்பதால் ஏராளமான தவறு ஏற்பட்டுள்ளது என அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்கவாகிபுன் நய்யிராத் 1/319)

என்றாலும் இந்தச் செய்தியை அதாஉ அவர்களிடமிருந்து ஆரம்பத்தில் கேட்டவர்கள் சிறிது வார்த்தை வித்தியாசத்தில் அறிவித்துள்ளனர். (பார்க்க: அஹ்மத்-643)


மேலும் பார்க்க: அஹ்மத்-643 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.