ஹதீஸ் எண்-15121 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
ஹுமைத் பின் அர்ரபீஃ கூறியதாவது:
ஹுமைத் பின் மாலிக் அல்லக்மீ அறியப்பட்டவர் என்பதற்கு என்ன செய்தி இருக்கிறது? என்று என்னிடம் யஸீத் பின் ஹாரூன் கேட்டார். நான் அவர் என்னுடைய பாட்டனார் என்று கூறினேன். உடனே யஸீத் அவர்கள், என்னை மகிழ்ச்சியடைச் செய்தாய்! என்னை மகிழ்ச்சியடைச் செய்தாய்! இப்போது தான் இந்த செய்தி ஹதீஸாக மாறிவிட்டது என்று கூறினார்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இதில் ஒன்றும் பெரிதாக மகிழச்சிக் கிடையாது. ஹுமைத் பின் அர்ரபீஃ பின் ஹுமைத் பின் மாலிக் அல்கூஃபீ, அல்கஸ்ஸாஸ் மிகவும் பலவீனமானவர் ஆவார். யஹ்யா பின் மயீனும், மற்றவர்களும் இவரை பொய்யர் என்று கூறியுள்ளனர். மேலும் ஹுமைத் பின் மாலிக் அறியப்படாதவர் ஆவார்.
மேலும் மக்ஹூல், முஆத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பது முன்கதிஃ-அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்பட்ட செய்தியாகும்.
ஹுமைத் —> மக்ஹூல் —> காலித் பின் மஃதான் —> முஆத் (ரலி) என்றும், ஹுமைத் —> மக்ஹூல் —> மாலிக் பின் யுகாமிர் —> முஆத் (ரலி) என்றும் கூறப்படும் அறிவிப்பாளர்தொடர்கள் (மஹ்ஃபூல்) முன்னுரிமை பெற்ற செய்திகள் அல்ல. அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
இந்தக் கருத்தில் (வேறு) ஒரு பலவீனமான செய்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்றவைகளை ஆதாரமாக ஏற்கக் கூடாது. (ஹதீஸ் எண்-15123)
(பைஹகீ-குப்ரா: 15122)وَأَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ الْفَقِيهُ، أنا عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ، نا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ عَلِيٍّ الدُّولَابِيُّ نا حُمَيْدُ بْنُ الرَّبِيعِ، نا يَزِيدُ بْنُ هَارُونَ، نا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ حُمَيْدِ بْنِ مَالِكٍ النَّخَعِيِّ، فَذَكَرَ نَحْوَ حَدِيثِ إِسْمَاعِيلَ.
قَالَ حُمَيْدٌ: قَالَ لِي يَزِيدُ بْنُ هَارُونَ: وَأِيُّ حَدِيثٍ لَوْ كَانَ حُمَيْدُ بْنُ مَالِكٍ اللَّخْمِيُّ مَعْرُوفًا؟ قُلْتُ: هُوَ جَدُّ أَبِي، قَالَ يَزِيدُ: سَرَرْتَنِي الْآنَ، صَارَ حَدِيثًا ,
قَالَ الشَّيْخُ: لَيْسَ فِيهِ كَبِيرُ سُرُورٍ فَحُمَيْدُ بْنُ رَبِيعِ بْنِ حُمَيْدِ بْنِ مَالِكٍ الْكُوفِيُّ الْخَزَّازُ ضَعِيفٌ جِدًّا، نَسَبَهُ يَحْيَى بْنُ مَعِينٍ وَغَيْرُهُ إِلَى الْكَذِبِ , وَحُمَيْدُ بْنُ مَالِكٍ مَجْهُولٌ ,
وَمَكْحُولٌ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ مُنْقَطِعٌ , وَقَدْ قِيلَ عَنْ حُمَيْدٍ عَنْ مَكْحُولٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَقِيلَ عَنْهُ عَنْ مَكْحُولٍ عَنْ مَالِكِ بْنِ يَخَامِرَ عَنْ مُعَاذٍ وَلَيْسَ بِمَحْفُوظٍ وَاللهُ أَعْلَمُ , وَقَدْ رُوِيَ فِي مُقَابَلَتِهِ حَدِيثٌ ضَعِيفٌ لَا يَجُوزُ الِاحْتِجَاجُ بِمِثْلِهِ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-15122.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-13963.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14215-ஹுமைத் பின் அர்ரபீஃ பற்றி சிலர் பாராட்டி இருந்தாலும் சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் விமர்சித்துள்ளனர் என்பதால் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்…
(நூல்: லிஸானுல் மீஸான்-3/297)
மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-11331 .
சமீப விமர்சனங்கள்