ஒருவர் ஓர் ஆட்டைப் படுக்க வைத்து, அதன் பக்கவாட்டில் தனது காலை வைத்து, தனது கத்தியைக் கூர் தீட்டிக் கொண்டிருந்தார். அந்த ஆடு அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.
அப்போது (அவரைக் கடந்துச் செல்லவிருந்த) நபி (ஸல்) அவர்கள், அவரிடம் நின்றுக் கொண்டு, “இதற்கு முன்பே (கத்தியைக் கூர் தீட்டி) வைத்திருக்கக் கூடாதா? இரண்டு முறை அதை மரணிக்கச் செய்ய விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை ஆஸிம் அவர்களிடமிருந்து அப்துர்ரஹீம் பின் ஸுலைமான் அவர்கள் அறிவித்துள்ளதைப் போன்று ஹம்மாத் பின் ஸைத் அவர்களும் அறிவித்துள்ளார். அவர் அறிவித்த வாக்கியம், “அதை பலமுறை மரணிக்கச் செய்ய விரும்புகிறாயா?” என்று வந்துள்ளது.
இதை ஆஸிம் அவர்களிடமிருந்து மஃமர் அவர்களும் அறிவித்துள்ளார். ஆனால் இதில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைக் குறிப்பிடாமல் முர்ஸலாக அறிவித்துள்ளார்.
(பைஹகீ-குப்ரா: 19141)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الْفَارِسِيُّ، ثنا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنِي يُوسُفُ بْنُ عَدِيٍّ، حَدَّثَنِي عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ:
قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ وَاضِعٍ رِجْلَهُ عَلَى صَفْحَةِ شَاةٍ وَهُوَ يُحِدُّ شَفْرَتَهُ وَهِيَ تَلْحَظُ إِلَيْهِ بِبَصَرِهَا , فَقَالَ: ” أَفَلَا قَبْلَ هَذَا؟ أَتُرِيدُ أَنْ تُمِيتَهَا مَوْتًا
تَابَعَهُ حَمَّادُ بْنُ زَيْدٍ , عَنْ عَاصِمٍ وَقَالَ: ” أَتُرِيدُ أَنْ تُمِيتَهَا مَوْتَاتٍ “. وَرَوَاهُ مَعْمَرٌ عَنْ عَاصِمٍ فَأَرْسَلَهُ لَمْ يَذْكُرْ فِيهِ ابْنَ عَبَّاسٍ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-19141.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-17613.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்
2 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்
3 . அப்துல்லாஹ் பின் ஜஅஃபர்
4 . யஃகூப் பின் ஸுஃப்யான்-அல்ஃபஸவீ
5 . யூஸுஃப் பின் அதீ
6 . அப்துர்ரஹீம் பின் ஸுலைமான்
7 . ஆஸிம் பின் ஸுலைமான்-அல்அஹ்வல்
8 . இக்ரிமா (இப்னு அப்பாஸ் அவர்களின் அடிமை)
9 . அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
மேலும் பார்க்க: ஹாகிம்-7563.
சமீப விமர்சனங்கள்