தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-19244

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறு யாரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மினாவுடைய நாட்கள் (பிறை 11, 12, 13) உண்ணுவது மற்றும் பருகுவதற்குரிய நாட்களாகும். இதனை எழுந்து அறிவிப்பு செய்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கிபார் குலத்தைச் சார்ந்த மனிதரிடம் கூறினார்கள்.

சுலைமான் என்ற அறிவிப்பாளர் மினாவுடைய நாட்கள் அறுப்பதற்குரிய நாட்களுமாகும் என்ற வார்த்தையைக் கூடுதலாக அறிவித்துள்ளார். இதை இப்னு ஜுரைஜ் கூறியுள்ளார்.

 

(வேறு சில அறிவிப்புகளில் கிபார் குலத்தைச் சார்ந்த அந்த மனிதர் பிஷ்ர் பின் ஸுஹைம் (ரலி) என்று வந்துள்ளது)

(பைஹகீ-குப்ரா: 19244)

وَأَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أنبأ أَحْمَدُ بْنُ عُبَيْدٍ، ثنا الْحَارِثُ بْنُ أَبِي أُسَامَةَ، ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ أَخْبَرَهُ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ سَمَّاهُ نَافِعٌ فَنَسِيتُهُ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ مِنْ غِفَارٍ: ” قُمْ فَأَذِّنْ أَنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا مُؤْمِنٌ , وَأَنَّهَا أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ أَيَّامُ مِنًى “.

زَادَ سُلَيْمَانُ بْنُ مُوسَى: وَذَبْحٍ , يَقُولُ: أَيَّامُ ذَبْحٍ , ابْنُ جُرَيْجٍ يَقُولُهُ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-19244.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-17708.




  • இச்செய்தில் மினாவுடைய நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரியவை என்பது தான் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது.
  • இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் என்பவர் மினாவுடைய நாட்கள் குர்பானிக்குரியவை என்று சுலைமான் கூடுதலாக கூறியதாக அறிவிக்கின்றார். அதற்குரிய முழுமையான அறிவிப்பாளர் வரிசையை இப்னு ஜுரைஜ் குறிப்பிடவில்லை………


3 . இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-19244 ,


மேலும் பார்க்க: அஹ்மத்-16751 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.