தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-19273

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள்,  நபியான பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் கைவிட்டது இந்த செய்தியின் காரணமாகத்தான் என்று அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், இந்தச் செய்தி கதாதா (ரஹ்) வழியாகவும், அனஸ் (ரலி) வழியாகவும் வேறு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. அவை ஒரு பொருட்டே அல்ல.

 

(பைஹகீ-குப்ரா: 19273)

أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ دَاوُدَ الْعَلَوِيُّ رَحِمَهُ اللهُ , أنبأ حَاجِبُ بْنُ أَحْمَدَ بْنِ سُفْيَانَ الطُّوسِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ حَمَّادٍ الْأَبْيُورْدِيُّ، ثنا عَبْدُ الرَّزَّاقِ، أنبأ عَبْدُ اللهِ بْنُ مُحَرَّرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَ النُّبُوَّةِ.

قَالَ عَبْدُ الرَّزَّاقِ: إِنَّمَا تَرَكُوا عَبْدَ اللهِ بْنَ مُحَرَّرٍ لِحَالِ هَذَا الْحَدِيثِ.
قَالَ الْفَقِيهُ رَحِمَهُ اللهُ: وَقَدْ رُوِيَ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ قَتَادَةَ , وَمِنْ وَجْهٍ آخَرَ عَنْ أَنَسٍ , وَلَيْسَ بِشَيْءٍ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-19273.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-17735.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர். எனவே இது மிக பலவீனமான செய்தி.

மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7960.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.