அலி (ரலி) அவர்கள் கூறியதாவது:
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.
பின்பு நரகில் செல்லும் இருவரை கூறினார்கள்.
- (நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல்) தீர்ப்பில் அநீதி செய்த மனிதர். இவர் நரகத்தில் புகுவார்.
- ஆய்வு செய்தும், நீதியில் தவறிழைத்தவர். இவரும் நரகத்தில் புகுவார்.
- ஆய்வு செய்து சரியாக தீர்ப்பளித்தவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.
அறிவிப்பவர் : அபுல்ஆலியா (ரஹ்)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா (ரஹ்) அவர்கள், அலி (ரலி) அவர்களிடமிருந்து இச்செய்தியை அறிவிக்கும் அபுல்ஆலியாவிடம் , ஆய்வு செய்தும், நீதியில் தவறிழைத்தவரின் நிலை ஏன் நரகம் செல்வார்?என்று கேட்டார். அதற்கு அபுல்ஆலியா, அவர் சரியாக தீர்ப்பளிக்க தெரியாவிட்டால் தீர்ப்பளிக்கும் நீதிபதி பொறுப்பில் இருந்திருக்கக் கூடாது என்று கூறினார்கள்.
பைஹகீ கூறுகிறார்:
அபுல்ஆலியா அவர்களின் விளக்கத்தின் படி மேற்கண்ட செய்தி, ஆய்வுத்திறன் இல்லாதவர்கள் பற்றியே எச்சரிக்கை செய்கிறது என்று தெரிகிறது. அம்ர் பின் ஆஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) போன்றோர் வழியாக வரும் ஹதீஸ்கள் மூலம் ஆய்வுத்திறன் உள்ள நீதிபதி ஆய்வு செய்து தீர்ப்பளித்தால் சரியாக இருந்தால் இரண்டு நன்மையும், தவறாக இருந்தால் ஒரு நன்மையும் உண்டு என்று தெரிகிறது…
(பைஹகீ-குப்ரா: 20675)حَدَّثَنَا أَبُو طَاهِرٍ الْفَقِيهُ , أنبأ أَبُو طَاهِرٍ مُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْمُحَمَّدَآبَاذِيُّ، ثنا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ الْمُنَادِي، ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ , ثنا شُعْبَةُ , عَنْ قَتَادَةَ , عَنْ أَبِي الْعَالِيَةِ , عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ:
الْقُضَاةُ ثَلَاثَةٌ: فَاثْنَانِ فِي النَّارِ , وَوَاحِدٌ فِي الْجَنَّةِ، فَأَمَّا اللَّذَانِ فِي النَّارِ: فَرَجُلٌ جَارَ عَنِ الْحَقِّ مُتَعَمِّدًا , وَرَجُلٌ اجْتَهَدَ رَأْيَهُ فَأَخْطَأَ , وَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ , فَرَجُلٌ اجْتَهَدَ رَأْيَهُ فِي الْحَقِّ فَأَصَابَ ” , قَالَ: فَقُلْتُ لِأَبِي الْعَالِيَةِ: ” مَا بَالُ هَذَا الَّذِي اجْتَهَدَ رَأْيَهُ فِي الْحَقِّ فَأَخْطَأَ؟ ” قَالَ: ” لَوْ شَاءَ لَمْ يَجْلِسْ يَقْضِي , وَهُوَ لَا يُحْسِنُ يَقْضِي “.
قَالَ الشَّيْخُ رَحِمَهُ اللهُ: ” تَفْسِيرُ أَبِي الْعَالِيَةِ عَلَى مَنْ لَمْ يُحْسِنْ يَقْضِي , دَلِيلٌ عَلَى أَنَّ الْخَبَرَ وَرَدَ فِيمَنِ اجْتَهَدَ رَأْيَهُ وَهُوَ مِنْ غَيْرِ أَهْلِ الِاجْتِهَادِ , فَإِنْ كَانَ مِنْ أَهْلِ الِاجْتِهَادِ فَأَخْطَأَ , فِيمَا يَسُوغُ فِيهِ الِاجْتِهَادُ , رُفِعَ عَنْهُ خَطَؤُهُ , إِنْ شَاءَ اللهُ , بِحُكْمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَدِيثِ عَمْرِو بْنِ الْعَاصِ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا , وَذَلِكَ يَرِدُ وَبِاللهِ التَّوْفِيقُ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-20675.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.
இது மவ்கூஃபான செய்தி. சில ஹதீஸ்கலை அறிஞர்கள் அலி (ரலி) அவர்கள் இதை கூறவில்லை என்று கூறியுள்ளனர்…
மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21599 .
சமீப விமர்சனங்கள்