தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-3140

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சுப்ஹு தொழுகையின் குனூத்தில் பிரார்த்திப்பதற்காக அல்லாஹும் மஹ்தினி ஃபீமன் ஹதய்த்த, வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வதவல்லனா ஃபீமன் தவல்லய்த்த வபாரிக்லனா ஃபீமா அஃதய்த்த வகினா ஷர்ர மா கலய்த்த, இன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க இன்னஹு லாயதில்லு மன் வாலய்த்த தபாரக்த ரப்பனா வதஆலய்த்த என்ற துஆவை எங்களுக்குக் கற்றுத் தருபவர்களாக இருந்தார்கள்.

(பைஹகீ-குப்ரா: 3140)

فَقَدْ أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ بْنِ إِسْحَاقَ الْبَزَّارُ بِبَغْدَادَ مِنْ أَصْلِ سَمَاعِهِ بِخَطِّ أَبِي الْحَسَنِ الدَّارَقُطْنِيِّ أنبأ أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ الْفَاكِهِيُّ بِمَكَّةَ ثنا أَبُو يَحْيَى عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ زَكَرِيَّا بْنِ الْحَارِثِ بْنِ أَبِي مَيْسَرَةَ، أَخْبَرَنِي أَبِي، أنبأ عَبْدُ الْمَجِيدِ يَعْنِي ابْنَ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ أَنَّ بُرَيْدَ بْنَ أَبِي مَرْيَمَ أَخْبَرَهُ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، وَمُحَمَّدَ بْنَ عَلِيٍّ هُوَ ابْنُ الْحَنَفِيَّةِ بِالْخَيْفِ يَقُولَانِ:

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْنُتُ فِي صَلَاةِ الصُّبْحِ وَفِي وِتْرِ اللَّيْلِ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ: ” اللهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-3140.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-2883.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூயஹ்யா-அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸகரிய்யா பின் ஹாரிஸ் பின் அபூ மைஸரா என்பவரின் தந்தையான ராவீ-3878-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸகரிய்யா பின் ஹாரிஸ் என்பவரைப் பற்றி முக்கிய நூல்களில் குறிப்பு இல்லை. (எனவே சிலர் இவரை அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்) 
  • இவர் மக்காவின் முஃப்தீகளில் ஒருவர் என்று முஹம்மது பின் இஸ்ஹாக் அல்ஃபாகிஹீ அவர்கள் தனது அக்பாரு மக்கா என்ற நூலில் கூறியுள்ளார். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் வேறு ஒரு செய்தியின் விசயத்தில் இந்தத் தகவலை கூறியுள்ளார்.

(நூல்: அக்பாரு மக்கா-2/333, அஸ்ஸஹீஹா-3219)

  • மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ இப்னு ஜுரைஜ் அவர்கள், நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் ஆவார். இந்த செய்தியில் இவரின் ஆசிரியரின் பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று வந்துள்ளது. மேலும் இதில் இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்யாமல் அறிவித்துள்ளார்.
  • அஃரஜ் என்ற புனைப் பெயரில் அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று ஒரு அறிவிப்பாளர் இருக்கின்றார். அவர் நம்பகமானவர். ஆனால் இச்செய்தியில் இடம்பெறக் கூடிய அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவரின் நிலை பற்றி தெரிய வேண்டிய அவசியமுள்ளது என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

(நூல்: அத்தல்கீஸ்-1/147)

இதற்கான காரணம்:

1 . இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்மஜீத் என்பவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியரின் பெயரை அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று அறிவித்துள்ளார்.

2 . இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஸஃப்வான் அல்உமவிய்யு என்பவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியரின் பெயரை அப்துல்லாஹ் பின் ஹுர்முஸ் என்று அறிவித்துள்ளார். (இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இதைக் குறிப்பிட்டுவிட்டு முதல் வகையே பலமானது என்று கூறியுள்ளார்)

3 . இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அல்வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
என்பவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியரின் பெயரை இப்னு ஹுர்முஸ் என்று அறிவித்துள்ளார்.

4 . இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மக்லத் பின் யஸீத், இப்னு ஜுரைஜுக்கும், புரைத் பின் அபூமர்யமுக்கும் இடையில் எவரையும் கூறாமல் அறிவித்துள்ளார். (மக்லத் என்பவர் நம்பகமானவர் என்றாலும் சிறிது தவறிழைப்பவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறியுள்ளார்)

இந்த நான்கு வகையான அறிவிப்புகளில் அப்துல்மஜீத் அவர்கள் அறிவிக்கும் செய்திக்கே முதலிடம் தரவேண்டும். ஏனெனில் இவர்தான் இப்னு ஜுரைஜின் செய்திகளை நன்கு தெரிந்தவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களும் இப்னு ஜுரைஜிடமிருந்து அறிவிப்பவர்களில் இவர் மிகப்பலமானவர் (அதாவது முன்னுரிமை கொடுக்கப்படவேண்டியவர்) என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/47, தஹ்தீபுத் தஹ்தீப்-2/605)

மேற்கண்ட தகவல்களிலிருந்து அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸகரிய்யா பின் ஹாரிஸ் 
என்பவர் பற்றி விமர்சனம் இல்லை என்பதாலும், இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்மஜீத் அவர்களின் அறிவிப்பை ஏற்கலாம் என்பதின் படியும் சிலர் இந்த செய்தியை சரியானது என்றும் குறைந்த பட்சம் ஹஸன் தரம் என்றும் கூறுகின்றனர்.

  • இப்னு ஜுரைஜிடமிருந்து அப்துல்மஜீத் என்பவர் அறிவிக்கும் செய்திகளை ஏற்கலாம் என்று சிலர் கூறி இருந்தாலும் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவர் இப்னு ஜுரைஜிடமிருந்து அறிவிக்கும் சில செய்திகளை குறிப்பிட்டு விட்டு இவை மஹ்ஃபூல் அல்ல என்றும் மேலும் இவ்வாறே வேறு சில செய்திகளும் மஹ்ஃபூல் அல்ல என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/47)

மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4957 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.