தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-3236

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களுக்கு தொழுகையை கற்றுக்கொடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அவர்களை அதற்காக அடியுங்கள். மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்.…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

(பைஹகீ-குப்ரா: 3236)

أَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ الْقَزَّازُ بِمِصْرَ ثنا زَكَرِيَّا بْنُ يَحْيَى كَاتِبُ الْعُمَرِيِّ ثنا مُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنِ الْخَلِيلِ بْنِ مُرَّةَ، عَنِ اللَّيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

عَلِّمُوا صِبْيَانَكُمُ الصَّلَاةَ فِي سَبْعِ سِنِينَ، وَأَدِّبُوهُمْ عَلَيْهَا فِي عَشْرِ سِنِينَ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ، وَإِذَا زَوَّجَ أَحَدُكُمْ أَمَتَهُ عَبْدَهُ أَوْ أَجِيرَهُ فَلَا تَنْظُرْ إِلَى عَوْرَتِهِ، وَالْعَوْرَةُ فِيمَا بَيْنَ السُّرَّةِ وَالرُّكْبَةِ


Kubra-bayhaqi-Tamil-.
Kubra-bayhaqi-TamilMisc-3361.
Kubra-bayhaqi-Shamila-3236.
Kubra-bayhaqi-Alamiah-.
Kubra-bayhaqi-JawamiulKalim-2971.




إسناد ضعيف فيه الخليل بن مرة الضبعي وهو ضعيف الحديث ، والليث بن أبي سليم القرشي وهو ضعيف الحديث (الجوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் லைஸ் பின் அபீ சுலைம், கலீல் பின் முர்ரா போன்றோர் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான செய்தியாகும்.

லைஸ் பின் அபீ சுலைம் பற்றிய விமர்சனங்கள்:

تهذيب الكمال 742 (24/ 282)

قال عَبد الله (1) بن أحمد بن حنبل : سمعت أبي يقول : ليث ابن أَبي سليم مضطرب الحديث ، ولكن حدث عنه الناس.

وَقَال معاوية (2) بن صالح عن يحيى بن مَعِين : ليث بن أَبي سليم ضعيف إلا أنه يكتب حديثه (3).

وَقَال أبو معمر القَطِيعِيّ (3) : كان ابن عُيَيْنَة يضعف ليث بن أَبي سليم (4).

وَقَال أيضا (2) : سمعت أبا زرعة يقول : ليث بن أَبي سليم لين الحديث ، لا تقوم به الحجة عند أهل العلم بالحديث.

  • லைஸ் பின் சுலைம் என்பவர் ஹதீஸில் குளறுபடி செய்யக்கூடியவர் என்று இமாம் அஹமத் பின் ஹம்பல் கூறியுள்ளார்.
  • இவர் பலவீனமானவர் என்று இமாம் யஹ்யா பின் மயீன்,இமாம் இப்னு உயைனா போன்றோர் கூறியுள்ளனர்.
  •  இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்றும் ஹதீஸ்துறை வல்லுநர்கள் இவரை ஆதாரமாகக் கொள்ள மாட்டார்கள் என்றும் இமாம் அபூ ஸுர்ஆ கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால், பாகம் 24, பக்கம் 282)

 

மேலும் பார்க்க: அபூதாவூத்-495 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.