தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6295

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

”நான் பெருநாளன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து தகப்பலல்லாஹு மின்னா வமின்க (அல்லாஹ் உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”நஅம் (ஆம்), தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று பதிலுரைத்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

(பைஹகீ-குப்ரா: 6295)

أَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ، ثنا مُحَمَّدُ بْنُ الضَّحَّاكِ بْنِ عَمْرِو بْنِ أَبِي عَاصِمٍ، ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُعَاوِيَةَ , ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الشَّامِيُّ، ثنا بَقِيَّةُ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ وَاثِلَةَ قَالَ:

لَقِيتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ، فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ , قَالَ: ” نَعَمْ , تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ

أَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ قَالَ: قَالَ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ: هَذَا مُنْكَرٌ , لَا أَعْلَمُ يَرْوِيهِ عَنْ بَقِيَّةَ غَيْرُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ هَذَا. قَالَ الشَّيْخُ رَحِمَهُ اللهُ: قَدْ رَأَيْتُهُ بِإِسْنَادٍ آخَرَ عَنْ بَقِيَّةَ مَوْقُوفًا غَيْرَ مَرْفُوعٍ , وَلَا أَرَاهُ مَحْفُوظًا


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6295.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-5815.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35388-முஹம்மத் பின் இப்ராஹிம் அஷ்ஷாமீ பற்றி, இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் பல அறிஞர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/492). எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • மேலும் இதில் வரும் ராவீ-37754-முஹம்மது பின் ளஹ்ஹாக் அறியப்படாதவர் ஆவார்.

மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-6294 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.