தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-7590

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

தங்கம், வெள்ளியைத் தவிர மற்ற எந்தக் கற்களுக்கும் ஸகாத் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்தக் கல்லுக்கும் ஸகாத் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(பைஹகீ-குப்ரா: 7590)

بَابُ مَا لَا زَكَاةَ فِيهِ مِنَ الْجَوَاهِرِ غَيْرَ الذَّهَبِ وَالْفِضَّةِ.

رَوَى عُمَرُ بْنُ أَبِي عُمَرَ الْكَلَاعِيُّ الدِّمَشْقِيُّ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

لَا زَكَاةَ فِي حَجَرٍ “.

أَخْبَرَنَاهُ أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ , أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ , ثنا يَزِيدُ بْنُ عَبْدِ اللهِ بِحِمْصٍ , ثنا كَثِيرُ بْنُ عُبَيْدٍ , ثنا بَقِيَّةُ , عَنْ عُمَرَ الْكَلَاعِيِّ فَذَكَرَهُ.

وَرَوَاهُ أَيْضًا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْوَقَّاصِيُّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ مَرْفُوعًا

وَرَوَاهُ  مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ الْعَرْزَمِيُّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ مَوْقُوفًا

وَرُوَاةُ هَذَا الْحَدِيثِ عَنْ عَمْرٍو كُلُّهُمْ ضَعِيفٌ وَاللهُ أَعْلَمُ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-7590.
Kubra-Bayhaqi-Shamila-7590.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-7014.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31174-உமர் பின் அபூஉமர் பற்றி, இவர் ஹதீஸில் மறுக்கப்படக் கூடியவர் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    கூறியுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர் என்றும், இவரது அறிவிப்பு மறுக்கப்பட வேண்டியது என்றும் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    கூறியுள்ளார்.

தஹ்தீபுல் கமால், பாகம் 21, பக்கம் 474

  • மேலும் ராவீ உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றி, இவர் பொய் சொல்பவர், மதிப்பற்றவர் என்றும் பலவீனமானவர் என்றும் இமாம் யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் மிகவும் பலவீனமானவர் என்று இமாம் அலீ இப்னுல் மதீனி அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் விடப்படக்கூடியவர் (பொய்யர்) என்று இமாம் அபூ ஹாத்திமும், நஸாயீயும் கூறியுள்ளார்கள். இவரை இமாம்கள் (பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று) விட்டுவிட்டனர் என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியுள்ளார்.

தஹ்தீபுல் கமால், பாகம் 19, பக்கம் 426

  • மேலும் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள் இதன் அறிவிப்பாளர்தொடர் அனைத்தும் பலவீனமானவை எனக் கூறியுள்ளார்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.