தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-10722

A- A+


ஹதீஸின் தரம்: More Info

அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

“யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ அவருக்குக் கியாம நாளில் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும். யார் அதனுடைய இறுதி பத்து வசனங்களை ஓதிகிறாரோ அவர் ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது அவன் சாட்டப்படமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நஸாயி: 10722)

أَخْبَرَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ الْبَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ أَبُو غَسَّانَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ كَانَتْ لَهُ نُورًا مِنْ مَقَامِهِ إِلَى مَكَّةَ، وَمَنْ قَرَأَ بِعَشْرِ آيَاتٍ مِنْ آخِرِهَا فَخَرَجَ الدَّجَّالُ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10722.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-10298.




  • இந்தச் செய்தி அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாக இரண்டு முறைகளில் இடம் பெற்றுள்ளது. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவும், மற்றொன்று நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நபித்தோழரின் கூற்று என்பதே சரியனது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் பார்க்க : ஹாகிம்-2072 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.