“யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ, அவர் ஓதிய பின்னர் தஜ்ஜாலை அடைந்தால் அவன் அவர் மீது சாட்டப்படமாட்டான்-அல்லது அவருக்கு எதிராக அவன் எந்த சதியும் செய்ய முடியாது.
யார் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதுவாரோ அவர் ஓதிய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும் என அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : கைஸ் பின் அப்பாத் (ரஹ்)
(நஸாயி: 10724)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ:
«مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ، ثُمَّ أَدْرَكَ الدَّجَّالَ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ، أَوْ لَمْ يَكُنْ لَهُ عَلَيْهِ سَبِيلٌ، وَمَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَانَ لَهُ نُورًا مِنْ حَيْثُ قَرَأَهَا مَا بَيْنَهُ وَبَيْنَ مَكَّةَ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10724.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-10299.
- இந்தச் செய்தி அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாக இரண்டு முறைகளில் இடம் பெற்றுள்ளது. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவும், மற்றொன்று நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நபித்தோழரின் கூற்று என்பதே சரியனது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் பார்க்க : ஹாகிம்-2072 .
சமீப விமர்சனங்கள்