மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகனுக்கு, அவனுடைய முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும்.
(உண்ணும்) ஆசை அவனை மிகைத்துவிட்டதென்றால், மூன்றில் ஒரு பாகம் உணவுக்கும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும் என்று (அல்லது இந்த கருத்திலுள்ள வாசகங்களை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
அம்ரு பின் உஸ்மான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் பகிய்யது பின் வலீத், மேற்கண்ட செய்தியை அறிவிக்கும் முஹம்மது பின் ஹர்பின் அறிவிப்பாளர்தொடருக்கு மாற்றமாக அறிவித்துள்ளார். (பார்க்க அடுத்த ஹதீஸ் எண்-6738)
(நஸாயி: 6737)أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، عَنْ صَالِحِ بْنِ يَحْيَى، عَنْ جَدِّهِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ الْكِنْدِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسْبُ الْآدَمِيِّ لُقْمَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ غَلَبَتْهُ نَفْسُهُ» ثُمَّ ذَكَرَ كَلِمَةً، مَعْنَاهَا فَثُلُثٌ طَعَامٌ، وَثُلُثٌ شَرَابٌ، وَثُلُثٌ لِلنَّفَسِ
خَالَفَهُ بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-6737.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-6523.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸாலிஹ் பின் யஹ்யா பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-17186 .
சமீப விமர்சனங்கள்