மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகனுக்கு, அவனுடைய முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும். அது முடியவில்லை என்றால், மூன்றில் ஒரு பாகம் உணவும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 17186)حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُلَيْمٍ الْكِنَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ جَابِرٍ الطَّائِيُّ، قَالَ: سَمِعْتُ الْمِقْدَامَ بْنَ مَعْدِي كَرِبَ الْكِنْدِيَّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَا مَلَأَ ابْنُ آدَمَ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسْبُ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ، فَثُلُثُ طَعَامٍ، وَثُلُثُ شَرَابٍ، وَثُلُثٌ لِنَفْسِهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-16556.
Musnad-Ahmad-Shamila-17186.
Musnad-Ahmad-Alamiah-16556.
Musnad-Ahmad-JawamiulKalim-16854.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபுல்முஃகீரா (அப்துல்குத்தூஸ் பின் ஹஜ்ஜாஜ்)
2 . ஸுலைமான் பின் ஸுலைம் (அபூஸலமா)
3 . யஹ்யா பின் ஜாபிர் (அபூஅம்ர்)
4 . மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48160-யஹ்யா பின் ஜாபிர் அத்தாயீ அவர்கள், மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்களிடம் ஹதீஸை செவியேற்கவில்லை என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார். இதன்படியே மிஸ்ஸீ, அலாயீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/133, தஹ்தீபுல் கமால்-31/248, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/563, தஹ்தீபுத் தஹ்தீப்-4/344)
எனவே இது முன்கதிஃ என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) இறந்தது ஹிஜ்ரீ 87, யஹ்யா பின் ஜாபிர் இறந்தது ஹிஜ்ரீ 126 என்பதால், இடைப்பட்ட 39 வருடங்களில் இருவரும் சந்திக்க வாய்ப்புள்ளதால் இதை சரியான ஹதீஸ் என்று கூறியுள்ளார். ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் நடுநிலையாக யஹ்யா பின் ஜாபிர், மிக்தாம் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருந்தால் சரியானது. இல்லையென்றால் முன்கதிஃ என்று கூறியுள்ளார். இதில் வரும் ஸுலைமான் பின் ஸுலைம் அறிவிப்பாளர்தொடர்களை குளறுபடியாக-அதாவது முஹம்மத் பின் ஹர்பின் அறிவிப்பில் யஹ்யா பின் ஜாபிர் அவர்களுக்கும், மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஸாலிஹ் பின் யஹ்யா என்பவரை கூறியுள்ளார்.
(பார்க்க: குப்ரா நஸாயீ-6737)
- மேற்கண்ட அபுல்முஃகீராவின் அறிவிப்பில் யஹ்யா பின் ஜாபிர் அவர்கள், நேரடியாக மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக ஸுலைமான் கூறியுள்ளார். ஆனால் இதே செய்தி அல்முஃஜமுல் கபீர்-644 இல் வந்துள்ளது. அதில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இல்லை.
எனவே யஹ்யா பின் ஜாபிர் அவர்கள், மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்று கூறும் அறிஞர்களின் கருத்து பலமாக உள்ளது என்று குறிப்பிட்டு அறிஞர் முக்பில் வாதீ அவர்கள் இந்த செய்தியை குறையுள்ள செய்தி என்று கூறியுள்ளார்.
(நூல்: அஹாதீஸு முஅல்லஹ்-1/369)
(218)- [222] حَدَّثَنَا ابْنُ عُلاثَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ الْحِمْصِيُّ، قَالَ: بَلَغَنَا، أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ: ” ثَلاثُ أَكَلاتٍ يُقِمْنَ صُلْبَ ابْنِ آدَمَ، فَإِنْ غَلَبَتْهُ نَفْسُهُ فَثُلُثٌ طَعَامٌ، وَثُلُثٌ شَرَابٌ، وَثُلُثٌ لِنَفَسِهِ
(73)- [75] حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْعُقَيْلِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ الْحِمْصِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ: ثَلاثُ أَكَلاتٍ أَوْ ثَلاثُ لُقْمَاتٍ، يُقِمْنَ صُلْبَ ابْنِ آدَمَ، فَإِنْ غَلَبَتْهُ نَفْسُهُ، فَثُلُثٌ لِطَعَامٍ، وَثُلُثٌ لِشَرَابٍ، وَثُلُثٌ لِنَفَسِهِ
முஆஃபீ, வகீஃ பின் ஜர்ராஹ் ஆகியோரின் ஸுஹ்த் என்ற நூலில், இந்த செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நமக்கு தகவல் கிடைத்தது என்று ஸுலைமான் பின் ஸுலைம் கூறியதாக வந்துள்ளது. என்றாலும் இவரிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் அப்துல்லாஹ் (இப்னு உலாஸா) என்பவர் பற்றி கருத்துவேறுபாடு இருப்பதால் ஸுலைமான் என்பவரின் தவறுக்கு இதை, நாம் ஆதாரமாகக் குறிப்பிடவில்லை)
யஹ்யா பின் ஜாபிர் அவர்கள், மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அதிகமான செய்திகளில், அதிகமானோரின் அறிவிப்பில் عن என்று அன்அனாவாகதான் வந்துள்ளது. எனவே சில செய்திகளில் வரும் ஸமிஃது-நேரடியாக கேட்டேன் என்ற வார்த்தை தவறானது என தெரிகிறது.
(இந்த தவறான செய்தியின் அடிப்படையில் தான் சிலர் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர். இதைப் பற்றிய விவரம் பார்க்க: அல்இர்ஷாதாது ஃபீ தக்வியதில் ஹதீஸ்-1/406-409)
மேலும், இந்தக் கருத்தில் மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் காலித் பின் மஃதான், ஹபீப் பின் உபைத் ஆகியோரின் அறிவிப்பிலும் விமர்சனம் உள்ளது என்பதால் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
1 . இந்தக் கருத்தில் மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-, அஸ்ஸுஹ்த்-அல்முஆஃபீ-, தபகாதுல் குப்ரா-, அஹ்மத்-, அல்வரஃ-அஹ்மத்-, திர்மிதீ-, இப்னு மாஜா-, இஸ்லாஹுல் மால்-, அல்ஜூஃ-, குப்ரா நஸாயீ-, தஹ்தீபுல் ஆஸார்-தபரீ-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-, அமாலீ-இப்னு மன்தா-, ஹாகிம்-, முஸ்னதுஷ் ஷிஹாப்-, ஷுஅபுல் ஈமான்-, அல்ஆதாப்-பைஹகீ-, அல்ஃபகீஹ்-கதீப்-, மூளிஹ்-கதீப்-, அமாலீ-ஷஜரீ-, ஷரஹுஸ் ஸுன்னா-, அஷ்ஷிஃபா-இயாள்-, தாரீகு திமிஷ்க்-, தல்பீஸு இப்லீஸ்-இப்னுல் ஜவ்ஸீ-, முஃஜமுஷ் ஷுயூக்-தஹபீ-,
- 1 . யஹ்யா பின் ஜாபிர் —> மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
பார்க்க: அஹ்மத்-17186 , திர்மிதீ-2380 , இப்னு ஹிப்பான்-674 , 5236 , ஹாகிம்-7139 , 7945 , குப்ரா நஸாயீ-6738 , 6739 , அல்முஃஜமுல் கபீர்-644 , 645 , 646 ,
- 2 . முஹம்மத் பின் ஹர்ப் —> இவரின் தாயார் —> இவரின் தாயார் —> மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-3349 ,
- 3 . ஸாலிஹ் பின் யஹ்யா —> மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
பார்க்க: குப்ரா நஸாயீ-6737 ,
- 4 . ஸாலிஹ் பின் யஹ்யா —> யஹ்யா பின் மிக்தாம் —> மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
பார்க்க: இப்னு ஹிப்பான்-5236 ,
- 5 . ஹரீஸ் பின் உஸ்மான் —> ஹபீப் பின் உபைத் —> மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-662 ,
அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-47.
சமீப விமர்சனங்கள்