நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகனுக்கு, அவனுடைய முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும்.
(உண்ணும்) ஆசை அவனை மிகைத்துவிட்டதென்றால், மூன்றில் ஒரு பாகம் உணவுக்கும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
(நஸாயி: 6738)أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ أَبِي سَلَمَةَ سُلَيْمَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ يَحْيَى بْنِ جَابِرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسْبُ ابْنِ آدَمَ لُقْمَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ غَلَبَتْهُ نَفْسُهُ فَثُلُثٌ طَعَامٌ، وَثُلُثٌ شَرَابٌ، وَثُلُثٌ لِلنَّفَسِ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-6738.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-6524.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் ஜாபிர் அவர்கள், மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை; மேலும் பகிய்யது பின் வலீத் விமர்சிக்கப்பட்டவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-17186 .
சமீப விமர்சனங்கள்