மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகனுக்கு, அவனுடைய முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும். அது முடியவில்லை என்றால், மூன்றில் ஒரு பாகம் உணவும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில், மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறாமல் இடம்பெற்றுள்ளது.
(திர்மிதி: 2380)حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ الحِمْصِيُّ، وَحَبِيبُ بْنُ صَالِحٍ، عَنْ يَحْيَى بْنِ جَابِرٍ الطَّائِيِّ، عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ. بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ»
حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَرَفَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، نَحْوَهُ، وَقَالَ المِقْدَامُ بْنُ مَعْدِي كَرِبَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَذْكُرْ فِيهِ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2380.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2314.
சமீப விமர்சனங்கள்