மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகனுக்கு, அவனுடைய முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும். (அதைவிட கூடுதல் உணவு) அவசியம் என்றால், மூன்றில் ஒரு பாகம் உணவுக்கும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
(இப்னு ஹிப்பான்: 5236)أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ الْأَبْرَشُ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُلَيْمٍ الْكِنَانِيُّ، عَنْ صَالِحِ بْنِ يَحْيَى بْنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ الْمِقْدَامِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَا مَلَأَ آدَمَيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسْبُكَ يَا ابْنَ آدَمَ لُقَيْمَاتٌ يُقِمْنَ صُلْبَكَ، فَإِنْ كَانَ لَا بُدَّ فَثُلُثٌ طَعَامٌ، وَثُلُثٌ شَرَابٌ، وَثُلُثٌ نَفَسٌ»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-5236.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-5348.
إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا صالح بن يحيى الكندي وهو مقبول ، ويحيى بن المقدام الكندي وهو مجهول الحال
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸாலிஹ் பின் யஹ்யா பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்கள் இவரைப்பற்றி விமர்சனம் உள்ளது என்றும், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் இவர் தவறிழைப்பவர் எனவும் கூறியுள்ளனர். மூஸா பின் ஹாருன் அவர்கள், ஸாலிஹும், யஹ்யா பின் மிக்தாமும் யாரென அறியப்படாதவர்கள் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2 / 202 ) - எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-17186 .
தமிழ் இன்னும் வரவில்லை சகோ