தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-7691

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நவ்வாஸ் பின் ஸம்ஆன் அல்கிலாபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

எந்த ஒரு மனித உள்ளமாயினும் அது அளவிலா அருளாளனான அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே தான் உள்ளது. அவன் நாடினால் அதை நல்வழியில் நிலைப்படுத்துகிறான். அவன் நாடினால் அதை தீயவழியில் பிறழச் செய்துவிடுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

…யா முஸப்பிதல் குலூப் ஸப்பித் குலூபனா அலா தீனிக் உள்ளங்களை நிலைப்படுத்துபவனே எங்கள் உள்ளங்களை உன் மார்க்கத்தில் நிலைப்படுத்துவாயாக என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

தராசு அளவிலா அருளாளனாகிய அல்லாஹ்வின் கையிலே உள்ளது. மறுமை நாள் வரை அதன் மூலம் அவன் சிலரை உயர்த்திக் கொண்டும், சிலரை தாழ்த்திக் கொண்டும் இருக்கிறான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(குப்ரா-நஸாயி: 7691)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ بُسْرَ بْنَ عُبَيْدِ اللهِ، يَقُولُ: سَمِعْتُ أَبَا إِدْرِيسَ الْخَوْلَانِيَّ، يَقُولُ: سَمِعْتُ النَّوَّاسَ بْنَ سَمْعَانَ الْكِلَابِيَّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَا مِنْ قَلْبٍ إِلَّا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ إِنْ شَاءَ أَقَامَهُ، وَإِنْ شَاءَ أَزَاغَهُ» وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللهُمَّ مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دَيْنِكَ، وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ يَرْفَعُ أَقْوَامًا وَيَخْفِضُ آخَرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-7691.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: இப்னு மாஜா-199 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.