தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-859

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் தொழுகை நடத்தட்டும். அவர்களில் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவரே இமாமத் செய்வதற்கு மிக தகுதியானவர் என்று நபி (ஸல்) அவர்கள்  கூறியதாக அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

(குப்ரா-நஸாயி: 859)

أَخْبَرَنَا عُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى، عَنْ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا كَانُوا ثَلَاثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ»


Kubra-Tamil-.
Kubra-TamilMisc-857.
Kubra-Shamila-859.
Kubra-Alamiah-.
Kubra-JawamiulKalim-847.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34194-கதாதா பின் திஆமா ஸதூஸிய்யி நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்று அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்த செய்தியை கதாதாவிடமிருந்து ஷுஃபாவும் அறவித்துள்ளார். இவரிடமிருந்து ஷுஃபா அவர்கள் அறிவிப்பது சரியானவையாகும். காரணம் ஷுஃபா அவர்கள், கதாதாவிடமிருந்து தத்லீஸ் செய்யாத செய்திகளையே அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

(பார்க்க: முஸ்லிம்-1191 )

எனவே இது சரியான ஹதீஸ் ஆகும்.


மேலும் பார்க்க: அபூதாவூத்-2608 .

6 comments on Kubra-Nasaayi-859

  1. Assalamu alaikum,mele ulla hadith il qatadah enra arvipaalar edum pirugiraar .avar oru mudallis aana arvipaalaar.indaa hadith balaveenamanathu amaindagirathu.

    1. வஅலைக்கும் ஸலாம். சிரமம் பார்க்காமல் முடிந்த வரை தமிழில் பதிவிடுங்கள். எங்களுக்கும், படிக்கும் பிறருக்கும் இலகுவாக புரியும்.

      1. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ”கதாதா” என்பவர் ”முதல்லிஸ்” ஆவார். அதாவது தமது ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்தியையும் நேரடியாகக் கேட்டதைப் போன்று அறிவிப்பவர் ஆவார்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.