அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூவர் பயணத்தில் புறப்பட்டால் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
(அபூதாவூத்: 2608)حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرِ بْنِ بَرِّيٍّ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنْ نَافِعٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا خَرَجَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2241.
Abu-Dawood-Shamila-2608.
Abu-Dawood-Alamiah-2604.
Abu-Dawood-JawamiulKalim-2244.
إسناده حسن رجاله ثقات عدا عمرو بن أبي عمرو القرشي وهو صدوق يهم (الجوامع الكلم)
- பயணத்தில் அமீரை ஏற்படுத்த வேண்டும் என்ற செய்தி தவறானது. இமாமை ஏற்படுத்த வேண்டும் என்பதே சரியானது.
- நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து ராவீ-41097-முஹம்மது பின் அஜ்லான் அறிவிக்கும் செய்தியில் குளறுபடி உள்ளது என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.கூறியுள்ளார். (கூடுதல் தகவல் பார்க்க: இப்னு அஜ்லான்)
1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹாதிம் பின் இஸ்மாயீல் —> முஹம்மத் பின் அஜ்லான் —> நாபிவு —> அபூஸலமா —> அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
பார்க்க: அபூதாவூத்-2608 , முஸ்னத் அபீயஃலா-1054 , 1359 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8093 , 8094 , ஸுனன் குப்ரா பைஹகீ-10351 ,
- அபூநள்ரா (அல்முன்திர் பின்மாலிக்) —> அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2266 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3452 , முஸ்னத் அஹ்மத்-11190 , 11298 , 11314 , 11454 , 11481 , 11795 , தாரிமீ-1289 , முஸ்லிம்-1191 , நஸாயீ-782 , 840 , குப்ரா நஸாயீ-859 , 916 , முஸ்னத் அபீ யஃலா-1291 , 1319 , இப்னு குஸைமா-1508 , 1701 , இப்னு ஹிப்பான்-2132 , தாரகுத்னீ-1070 , குப்ரா பைஹகீ-5126 , 5287 , 5288 ,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-2609 .
3 . அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்-3812 .
4 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு குஸைமா-2541 .
5 . ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-9268 .
6 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4054 .
7 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8915 .
- பயணத்தில் இருக்கும் போது ஒருவரை அமீராக்கிக் கொள்ளுங்கள் என்று சில ஹதீஸ்களிலும், பயணத்தில் இருக்கும் போது ஒருவரை இமாமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று வேறு சில ஹதீஸ்களிலும் வந்துள்ளது.
- மேற்கண்ட அபூதாவூத்-2608 , 2609 ல் வரும் இவ்விரு ஹதீஸ்களும் அலீ பின் பஹ்ர் என்பவர் வழியாக இமாம் அபூதாவூதுக்குக் கிடைத்துள்ளது. அபூதாவூதை விட வயதில் மூத்தவர்களான ஹதீஸ்கலை அறிஞர்கள் இமாம் அபூசுர்ஆ, இமாம் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோருக்கும் இந்த ஹதீஸ்கள் கிடைத்தன. இவ்விருவருக்கும் அலீ பின் பஹ்ர் வழியாக அந்த ஹதீஸ் கிடைக்கவில்லை. மாறாக அவருக்கு முந்தைய அறிவிப்பாளரான ஹாதிம் பின் இஸ்மாயில் வழியாக இந்த ஹதீஸ்கள் இவ்விருவருக்கும் கிடைத்துள்ளன.
இதற்கான ஆதாரம்:
அப்துல்லாஹ் பின் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறுகிறார்கள்:
ஹாதிம் பின் இஸ்மாயீல் – முஹம்மத் பின் அஜ்லான் – நாபிவு – அபூ ஸலமா – அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்கள் வழியாக, ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸ் பற்றி அபூஸுர்ஆவிடமும் என் தந்தையிடமும் (அபூ ஹாதிம்) கேட்டேன். அதற்கு அவ்விருவரும் இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்கள் தொடரில் இடம் பெற்றுள்ளது. ஒன்று அபூ ஹுரைரா மற்றொன்று அபூ ஸயீத் என்று விடையளித்தார்கள்.
(நூல் : இலலுல் ஹதீஸ்-225 (2/75)
அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
எந்த அறிவிப்பாளர் வழியாக இந்த ஹதீஸை அறிவித்துள்ளாரோ அதே ஹதீஸ் பற்றித் தான் இவ்விரு இமாம்களிடமும் கேட்கப்படுகிறது. அதில் அமீராக ஆக்கிக் கொள்ளட்டும் (ஃபல் யுஅம்மிரூ) என்ற இடத்தில் (ஃபல் யவும்முஹும்) இமாமத் செய்யட்டும் என்று இடம் பெற்றுள்ளது.
அதாவது இமாம் அபூதாவூதை விட மூத்தவர்களான ஹதீஸ்களை ஆய்வு செய்வதில் மேதைகளாகத் திகழ்ந்த இவ்விரு இமாம்களும் மூவர் பயணம் மேற்கொண்டால் அவர்கள் ஜமாத்தாகத் தொழ வேண்டும், ஒருவர் இமாமத் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிடுகின்றனர். இமாமத் செய்யட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது தான் அமீராக்கட்டும் என்று அபூ தாவூதில் தவறுதலாக இடம் பெற்றுள்ளது என்பதை இத்தகவலில் இருந்து அறியலாம்.
- மேற்கண்ட செய்தி அபூஸயீத் (ரலி) , அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி), போன்றோர் வழியாக நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும், அறிவிப்பாளர் தொடர் சங்கிலித்தொடராக இருந்தாலும், அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நபித்தோழரை விட்டுவிட்டு முர்ஸலாக அறிவிக்கும் அறிவிப்பே சரியானது என அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் போன்றோர் கூறியுள்ளனர். காரணம் இப்னு அஜ்லான் தன் ஆசிரியரிடமிருந்து இப்படி அறிவிக்கிறார். இப்னு அஜ்லான் தோழர்கள், அதே ஆசிரியரிடமிருந்து முர்ஸலாக அறிவிக்கிறார்கள்.
(நூல்: அல்இலல் லிஇப்னி அபீஹாதிம் 2/75-77, இலலுத் தாரகுத்னீ-1795 )
ஸுலைமான் (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸை கட்டிய பின் அல்லாஹ்விடம் 3 விடயங்களை கேட்டார்கள். அல்லாஹ்வின் தீர்ப்பை ஒத்த தீர்ப்பு வழங்கும் தன்மை; அவருக்கு பின்னால் வரக்கூடிய யாருக்கும் வழங்கிடாத ஆட்சி; இந்த பள்ளிவாசலுக்கு தொழும் எண்ணத்தில் வருபவர்களின் பாவங்கள் அன்று பிறந்த பாலகனைப் போன்று மன்னிக்கப்பட வேண்டும். ஆதாரம் நஸாயீ, இப்னு மாஜா, ஸஹீஹ் இப்னு ஹிப்பான், அஹ்மத். இதன் உண்மைத் தன்மை வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
நாம் பார்த்தவரை இந்த அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் இல்லை. எனவே இது சரியான ஹதீஸ். பார்க்க: நஸாயீ-693 .