நபி (ஸல்) அவர்களுடன் நான் சில பயணங்களில் பங்கேற்று இருக்கிறேன். நான் சிறுமியாக இருந்தேன். அப்போது நான் சதை போடவில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து முன்னால் ஓடுங்கள்! என்று கூறினார்கள். மக்கள் ஒடினர். பின்பு என்னிடம் ஓடலாம் வா! இறுதியாக நான் உன்னை இந்தப் போட்டியில் முந்திவிடுவேன்! என்று கூறினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களை நான் முந்திவிட்டேன். என்னிடம் நபி (ஸல்) அவா்கள் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள்.
பின்பு ஒருநாள் நான் சதைபோட்டு உடல் பருமனாக ஆன போது நபி (ஸல்) அவர்களுடன் இன்னொரு பயணங்களில் நான் கலந்து கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து முன்னால் ஓடுங்கள்! என்று கூறினார்கள். மக்கள் ஒடினர். பின்பு என்னிடம் ஓடலாம் வா!இறுதியாக நான் உன்னை இந்தப் போட்டியில் முந்திவிடுவேன்! என்று கூறினார்கள். அதுபோல் நபி (ஸல்) அவர்கள் என்னை முந்திவிட்டார்கள். பின்பு, சிரித்துக் கொண்டே அது (முந்தைய தோல்வி) இதுக்கு சரியாகிவிட்டது என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(குப்ரா-நஸாயி: 8895)أَخْبَرَنِي عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنِ الْفَزَارِيِّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ:
كُنْتُ أَنَا وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَتَقَدَّمَ أَصْحَابُهُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَابِقِينِي» قَالَتْ: فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ، فَلَمَّا كَانَ بَعْدُ وَحَمَلْتُ اللَّحْمَ قَالَ: «سَابِقِينِي، فَسَابَقْتُهُ فَسَبَقَنِي» فَقَالَ: «هَذِهِ بِتِلْكَ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-8895.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-8621.
சமீப விமர்சனங்கள்