தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-26277

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்களுடன் நான் சில பயணங்களில் பங்கேற்று இருக்கிறேன். நான் சிறுமியாக இருந்தேன். அப்போது நான் சதை போடவில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து முன்னால் ஓடுங்கள்! என்று கூறினார்கள். மக்கள் ஒடினர். பின்பு என்னிடம் ஓடலாம் வா! இறுதியாக நான் உன்னை இந்தப் போட்டியில் முந்திவிடுவேன்! என்று கூறினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களை நான் முந்திவிட்டேன். என்னிடம் நபி (ஸல்) அவா்கள் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள்.

பின்பு ஒருநாள் நான் சதைபோட்டு உடல் பருமனாக ஆன போது நபி (ஸல்) அவர்களுடன் இன்னொரு பயணங்களில் நான் கலந்து கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து முன்னால் ஓடுங்கள்! என்று கூறினார்கள். மக்கள் ஒடினர். பின்பு என்னிடம் ஓடலாம் வா!இறுதியாக நான் உன்னை இந்தப் போட்டியில் முந்திவிடுவேன்! என்று கூறினார்கள். அதுபோல் நபி (ஸல்) அவர்கள் என்னை முந்திவிட்டார்கள். பின்பு, சிரித்துக் கொண்டே அது (முந்தைய தோல்வி) இதுக்கு சரியாகிவிட்டது என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 26277)

حَدَّثَنَا عُمَرُ أَبُو حَفْصٍ الْمُعَيْطِيُّ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

خَرَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ وَأَنَا جَارِيَةٌ لَمْ أَحْمِلِ اللَّحْمَ وَلَمْ أَبْدُنْ، فَقَالَ لِلنَّاسِ: «تَقَدَّمُوا» فَتَقَدَّمُوا، ثُمَّ قَالَ لِي: «تَعَالَيْ حَتَّى أُسَابِقَكِ» فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ، فَسَكَتَ عَنِّي، حَتَّى إِذَا حَمَلْتُ اللَّحْمَ وَبَدُنْتُ وَنَسِيتُ، خَرَجْتُ مَعَهُ فِي بَعْضِ أَسْفَارِهِ، فَقَالَ لِلنَّاسِ: «تَقَدَّمُوا» فَتَقَدَّمُوا، ثُمَّ قَالَ: «تَعَالَيْ حَتَّى أُسَابِقَكِ» فَسَابَقْتُهُ، فَسَبَقَنِي، فَجَعَلَ يَضْحَكُ، وَهُوَ يَقُولُ: «هَذِهِ بِتِلْكَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-25075.
Musnad-Ahmad-Shamila-26277.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-25685.




1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-806 , அஹ்மத்-26277 , 24118 , 24119 , 24981 , 25488 , 26252 , 26398 , இப்னு மாஜா-1979 , அபூதாவூத்-2578 , குப்ரா நஸாயீ-8893 , 8894 , 8895 , 8896 , இப்னு ஹிப்பான்-4691 , குப்ரா பைஹகீ-19758 , 19759 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.