தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

முஃளல்

---

அறிவிப்பாளர் வரிசையில் விடுபடும் அறிவிப்பாளர்களைக் கவனித்து

மறுக்கப்படும் செய்திகளின் வகைகள்

1. முர்ஸல்

2. முஃளல்

3. முன்கதிஃ

4. முஅல்லக்


 

முஃளல்

அறிவிப்பாளர் வரிசையில் தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டிருந்தால் அந்தச் செய்திக்கு முஃளல் எனப்படும்.

உதாரணம்:

“அடிமைக்கு நல்ல முறையில் ஆடையும் உணவும் வழங்க வேண்டும். அவர்களுக்கு இயலாத காரியத்தில் அவர்களை ஈடுப்படுத்தக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

நூல்: மாலிக்-2806 (1769)

இந்தச் செய்தியில், தொடர்ந்து இரண்டு அறிவிப்பாளர்கள் விடுப்பட்டிருக்கிறார்கள்.

இமாம் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) இவ்வாறு அறிவித்ததாக தனக்கு செய்தி கிடைத்தது என்று கூறியுள்ளார். இதில் முஹம்மத் பின் அஜ்லான், அவருடைய தந்தை அஜ்லான் ஆகிய இருவர் விடுபட்டுள்ளனர் என்று இமாம் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(நூல்: மஃரிஃபது உலூமில் ஹதீஸ், பக்கம்: 37)

தொடர்ச்சியாக இரண்டு நபர்கள் விடுபட்டு உள்ளதால் இதற்கு முஃளல் என்று குறிப்பிடப்படுகிறது.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.