ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம்:
அடிமையிடம் கருணையோடு நடந்துக்கொள்ள வந்துள்ள கட்டளை.
அடிமைக்கு நல்ல முறையில் ஆடையும் உணவும் வழங்க வேண்டும். அவர்களுக்கு இயலாத காரியத்தில் அவர்களை ஈடுப்படுத்தக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: மாலிக் (ரஹ்)
(முஅத்தா மாலிக்: 2806)68- الأَمْرُ بِالرِّفْقِ بِالْمَمْلُوكِ.
حَدَّثَنِي مَالِكٍ؛ أَنَّهُ بَلَغَهُ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ:
لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ بِالْمَعْرُوفِ، وَلاَ يُكَلَّفُ مِنَ الْعَمَلِ إِلاَّ مَا يُطِيقُ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-1769.
Muwatta-Malik-Shamila-2806.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
- இமாம் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. இந்த இருவருக்கும் இடையே முஹம்மத் பின் அஜ்லான், அவருடைய தந்தை அஜ்லான் ஆகிய இருவர் விடுபட்டுள்ளனர் என்று இமாம் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: மஃரிஃபது உலூமில் ஹதீஸ், பக்கம்: 37)
- தொடர்ச்சியாக இரண்டு நபர்கள் விடுபட்டு உள்ளதால் இந்த அறிவிப்பாளர்தொடர் முஃளல் என்ற வகையில் பலவீனமானதாகும். இந்த செய்தி சரியான அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
மேலும் பார்க்க: முஸ்லிம்-3420 .
சமீப விமர்சனங்கள்