தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-10163

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவர் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் செவிமடுத்த உமர் (ரலி) அவர்கள், அதை நல்லதாகக் கருதினார்கள்.

உடனே, அந்த மனிதரிடம், “நீர் இந்தப் புத்தகத்திலிருந்து (பிரதி) எழுதித் தருவீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார்.

உமர் (ரலி) அவர்கள், தனக்காக எழுதுவதற்கு ஒரு தோல் துண்டை விலைக்கு வாங்கினார்கள். பின்னர் அதை அந்த மனிதரிடம் கொண்டு வர, அவர் அதன் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் அதை எழுதினார்.

அதன் பின்னர், உமர் (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து, அதைப் படித்துக் காட்ட ஆரம்பித்தார்கள். (அவர் படிக்கப் படிக்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறிக் கொண்டே இருந்தது.

அப்போது அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு நபித்தோழர் தம் கையால் அந்தப் புத்தகத்தைத் தட்டிவிட்டு, “கத்தாபின் மகனே! உன் தாயார் உன்னை இழக்கட்டும்! நீர் இந்தப் புத்தகத்தைப் படிக்கிறீர். இன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமாற்றத்தை நீர் பார்க்கவில்லையா?” என்று கூறினார்.

அந்த நேரத்தில், நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக நான், (அறியாமையின் கதவுகளைத்) திறப்பவராகவும், (தூதுத்துவத்தை) முடிப்பவராகவும் அனுப்பப்பட்டுள்ளேன். அத்துடன், எனக்கு (ஆரம்பம் முதல்) முடிவுவரை அனைத்தும் செறிவுடன் அமைந்த ஒருங்கிணைந்த சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், எனக்கு (வழங்கப்படும்) செய்தி சுருக்கமாகவே சுருக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே, மார்க்கத்தில் ஆழமாகச் சென்று குழப்பம் விளைவிப்போர் உங்களை அழித்துவிட வேண்டாம்” என்று கூறினார்கள்.

(musannaf-abdur-razzaq-10163: 10163)

أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ،

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ مَرَّ بِرَجُلٍ يَقْرَأُ كِتَابًا سَمِعَهُ سَاعَةً، فَاسْتَحْسَنَهُ فَقَالَ لِلرَّجُلِ: أَتَكْتُبُ مِنْ هَذَا الْكِتَابِ؟ قَالَ: نَعَمْ، فَاشْتَرَى أَدِيمًا لِنَفْسِهِ، ثُمَّ جَاءَ بِهِ إِلَيْهِ فَنَسَخَهُ فِي بَطْنِهِ وَظَهْرِهِ، ثُمَّ أَتَى بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَقْرَأُهُ عَلَيْهِ، وَجَعَلَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَلَوَّنُ، فَضَرَبَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِيَدِهِ الْكِتَابَ، وَقَالَ: ثَكِلَتْكَ أُمُّكَ يَا ابْنَ الْخَطَّابِ، أَلَا تَرَى إِلَى وَجْهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ الْيَوْمِ وَأَنْتَ تَقْرَأُ هَذَا الْكِتَابَ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «إِنَّمَا بُعِثْتُ فَاتِحًا وَخَاتَمًا، وَأُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ وَفَوَاتِحَهُ، وَاخْتُصِرَ لِي الْحَدِيثُ اخْتِصَارًا، فَلَا يُهْلِكَنَّكُمُ الْمُتَهَوِّكُونَ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-10163.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.