தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-21509

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசல்களுக்கு (மனிதர்களில்) சிலர் தூண்களைப் போன்று இருப்பார்கள். அவர்களின் சபைத்தோழர்களாக வானவர்கள்   இருப்பார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்கு வராவிட்டால் வானவர்கள் அவர்களைத் தேடுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் வானவர்கள் அவர்களுக்கு உதவுவார்கள். அவர்கள் நோயாளியாகி விட்டால் வானவர்கள் அவர்களை நலம் விசாரிப்பார்கள். அவர்கள் தாமதமாகி வராமல் இருந்தால் அவர்களைத் தேடுவார்கள். அவர்கள் வந்துவிட்டால், நீங்கள், “அல்லாஹ்வை நினைவு கூருங்கள்; அல்லாஹ் உங்களை நினைவு கூருவான்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அப்துல்லாஹ் (ரஹ்)

(musannaf-abdur-razzaq-21509: 21509)

أخبرنا عبد الرزاق، عَنْ مَعْمَرٍ، عَنْ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ، رَفَعَ الْحَدِيثَ قَالَ:

إِنَّ لِلْمَسَاجِدِ أَوْتَادًا جُلَسَاؤُهُمُ المَلاَئِكَةُ يَتَفَقَّدُونَهُمْ، فَإِنْ كَانُوا فِي حَاجَةٍ أَعَانُوهُمْ، وَإِنْ مَرِضُوا عَادُوهُمْ، وَإِنْ خُلِّفُوا افْتَقَدُوهُمْ، وَإِنْ حَضَرُوا قَالُوا: اذْكُرُوا ذَكَرَكُمُ اللهُ.


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-21509.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அதாஉ பின் அப்துல்லாஹ் நபித்தோழர் அல்ல என்பதால் இது முர்ஸல் என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-9424 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.