முஹாஜிர் பின் ளம்ரா கூறியதாவது:
அபூஸலமாவும், ஸயீத் பின் ஜுபைர் அவர்களும் சந்தித்துக்கொண்டனர். ஸயீத் பின் ஜுபைர் அவர்கள், அபூஸலமாவிடம் நபிமொழியை எங்களுக்கு கூறுங்கள். அறிவிப்பதில் உங்களை பின்பற்றுவோம் என்று கூறினார்கள்.
அதற்கு அபூஸலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர் மற்றவர்களை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் இமாமத் செய்யும் அவரே அவர்களின் அமீராவார்…
அபூஸலமா அவர்கள் கூறினார்:
சிறிய வயதாக இருந்தாலும் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவரையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமீராக்க கூறினார்கள்.
(musannaf-abdur-razzaq-3812: 3812)
عَنِ الثَّوْرِيِّ، عَنْ ثَوْرٍ، عَنْ مُهَاجِرِ بْنِ ضَمْرَةَ قَالَ: اجْتَمَعَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدُ بْنُ جُبَيْرٍ، فَقَالَ سَعِيدٌ لِأَبِي سَلَمَةَ: حَدِّثْ فَإِنَّا سَنَتَّبِعُكَ، فَقَالَ أَبُو سَلَمَةَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا كَانَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيَؤُمَّهُمْ أَقْرَؤُهُمْ، فَإِنْ كَانَ أَصْغَرَهُمْ سِنًّا فَإِذَا أَمَّهُمْ فَهُوَ أَمِيرُهُمْ» قَالَ أَبُو سَلَمَةَ: فَذَاكُمْ أَمِيرٌ أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-3812.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-3689.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூஸலமா (ரஹ்) , நபி (ஸல்) அவர்களிடம் செவியேற்கவில்லையென்பதால் இது முர்ஸலான செய்தி.
- மேலும் இதில் வரும் முஹாஜிர் பின் ளம்ரா அறியப்படாதவர். (அல்லது முஹாஸிர்-முஹாஜிர் பின் ஹபீப் என்ற பெயரே இங்கு தவறாக கூறப்பட்டிருக்கலாம்)
முஹாஸிர்-முஹாஜிர் பின் ஹபீப் பற்றி, அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ராஸீ அவர்கள் லா பஃஸ பிஹீ என்று கூறியுள்ளார்கள். இவர் அப்படி கூறினால் 1. அவர் அறிவிக்கும் செய்தி ஹஸன் தரத்தில் அமைந்தது என்று பொருள். 2. இவரின் செய்தியை தனித்த ஆதாரமாக எடுக்கக்கூடாது; மற்ற அறிவிப்பாளர்கள் இவரைப்போன்று அறிவித்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். (பார்க்க : அல்ஜர்ஹு வத்தஃதீல் 8/439)
نا عبد الرحمن قال : سئل أبي عنه فقال : لا بأس به
الجرح والتعديل لابن أبي حاتم: (8 / 439)
3 . இந்தக் கருத்தில் அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்-3812 , 9256 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-3457 .
மேலும் பார்க்க: அபூதாவூத்-2608 .
சமீப விமர்சனங்கள்