உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? (இந்த நற்செயலுக்கு) உன்னைத் தேர்வு செய்யவா? வழங்கட்டுமா? வழங்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் பஹ்ரைன் நாட்டின் செல்வத்தை வழங்குவார்கள் என்று எண்ணினேன். நீ நான்கு ரக்அத்கள் தொழு! ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தையும், மற்றொரு அத்தியாயத்தையும் ஓது! பின்னர் அல்ஹம்து லில்லாஹ், வ ஸுப்ஹானல்லாஹ், வல்லாஹு அக்பர், வலாயிலாஹ இல்லல்லாஹு இதை 15 தடவைகள் கணக்கிட்டு (ஓதிக்) கொள்.
பின்னர் நீர் ருகூவு செய்த நிலையில் அதை 10 தடவைகள் கூறு! பிறகு தலையை உயர்த்தி நின்ற நிலையில் அதை 10 தடவைகள் கூறு! பின்னர் ஸஜ்தா செய்த நிலையில் அதை 10 தடவைகள் கூறு! பின்னர் தலையை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10 தடவைகள் கூறு!
பின்னர் ஸஜ்தா செய்த நிலையில் அதை 10 தடவைகள் கூறு! பின்னர் தலையை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10 தடவைகள் கூறு! இவை மொத்தம் 75 தடவைகளாகும். இதைப் போன்று மீதமுள்ள மூன்று ரக்அத்திலும் செய். இவற்றின் மொத்தம் 300ஆகும். இந்த தஸ்பீஹை (1.அல்ஹம்து லில்லாஹ் 2.ஸுப்ஹானல்லாஹ் 3.அல்லாஹு அக்பர் 4.லாயிலாஹ இல்லல்லாஹு என்று நான்காக) பிரித்து எண்ணினால் மொத்தம் 1200 ஆகும்.
பாத்திஹா அத்தியாயத்திற்குப் பிறகு இருபது ஆயத்துகள் அல்லது அதை விட அதிகமாக ஓது! இத்தொழுகையை பகல் அல்லது இரவில் அல்லது வாரத்தில் ஒரு நாள், அல்லது மாத்தில் ஒரு நாள், வருடத்தில் ஒரு நாள் அல்லது வாழ் நாளில் ஒரு நாள் தொழு! (அவ்வாறு தொழுதால்) உனது பாவங்கள், வானத்தின் நட்சத்திரம் அளவிற்கு அல்லது மழைத் துளிகள் அளவிற்கு அல்லது அதிகமான மணல் அளவிற்கு அல்லது காலத்தின் நாட்கள் அளவிற்கு இருந்தாலும் அல்லாஹ் உனது பாவங்களை மன்னிப்பான்.
அறிவிப்பவர் : ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி)
(musannaf-abdur-razzaq-5004: 5004)عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَافِعٍ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «أَلَا أَهَبُ لَكَ؟ أَلَا أَمْنَحُكَ؟ أَلَا أَحْذُوكَ؟ أَلَا أُوثِرُكَ؟ أَلَا؟ أَلَا؟» حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيَقْطَعُ لِي مَاءَ الْبَحْرَيْنِ قَالَ: ” تُصَلِّي أَرْبَعَ رَكَعَاتٍ تَقْرَأُ أُمَّ الْقُرْآنِ فِي كُلِّ رَكْعَةٍ وَسُورَةً، ثُمَّ تَقُولُ: الْحَمْدُ لِلَّهُ، وَسُبْحَانَ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَعُدَّهَا وَاحِدَةً حَتَّى تعُدَّ خَمْسَ عَشْرَةَ مَرَّةً، ثُمَّ تَرْكَعُ فَتَقُولُهَا عَشْرًا وَأَنْتَ رَاكِعٌ، ثُمَّ تَرْفَعُ فَتَقُولُهَا عَشْرًا وَأَنْتَ رَافِعٌ، ثُمَّ تَسْجُدُ فَتَقُولُهَا عَشْرًا وَأَنْتَ سَاجِدٌ، ثُمَّ تَرْفَعُ فَتَقُولُهَا عَشْرًا وَأَنْتَ جَالِسٌ، ثُمَّ تَسْجُدُ فَتَقُولُهَا عَشْرًا وَأَنْتَ سَاجِدٌ، ثُمَّ تَرْفَعُ فَتَقُولُهَا عَشْرًا وَأَنْتَ جَالِسٌ، فَتِلَكَ خَمْسٌ وَسَبْعُونَ، وَفِي الثَّلَاثِ الْأَوَاخِرِ كَذَلِكَ، فَذَلِكَ ثَلَاثُ مِائَةِ مَجْمُوعَةٍ، وَإِذَا فَرَّقْتَهَا كَانَتْ أَلْفًا وَمِائَتَيْنِ ـ وَكَانَ يَسْتَحِبُّ أَنْ يَقْرَأَ السُّورَةَ الَّتِي بَعْدَ أُمِّ الْقُرْآنِ عِشْرِينَ آيَةً فَصَاعِدًا ـ تَصْنَعُهُنَّ فِي يَوْمِكَ أَوْ لَيْلَتِكَ، أَوْ جَمْعَتِكَ، أَوْ فِي شَهْرٍ، أَوْ فِي سَنَةٍ، أَوْ فِي عُمْرِكَ، فَلَوْ كَانَتْ ذُنُوبُكَ عَدَدَ نُجُومِ السَّمَاءِ، أَوْ عَدَدَ الْقَطْرِ، أَوْ عَدَدَ رَمْلِ عَالِجٍ، أَوْ عَدَدَ أَيَّامِ الدَّهْرِ لَغَفَرَهَا اللَّهُ لَكَ
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-5004.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-4861.
إسناد شديد الضعف لأن به موضع انقطاع بين إسماعيل بن رافع الأنصاري وجعفر بن أبي طالب القرشي ، وفيه إسماعيل بن رافع الأنصاري وهو متروك الحديث
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இஸ்மாயீல் பின் ராஃபிஃ என்பவர் மிக பலவீனமானவர். இவர் நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்தவர் அல்லர். நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்பே ஜஃபர் (ரலி) அவர்கள் மரணித்து விட்டதால், நபி (ஸல்) காலத்துக்குப் பிந்தியவர் ஜஃபர் (ரலி) அவர்களை பார்த்திருக்கவோ, ஜஃபர் (ரலி)யிடமிருந்து கேட்டிருக்கவோ முடியாது என்பதால் இது அறிவிப்பாளர்தொடர், இடைமுறிந்த செய்தியாகும்.
- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க : குப்ரா பைஹகீ-4919 .
2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க : அபூதாவூத்-1297 .
3 . அன்ஸாரி ஒருவர் வழியாக வரும் செய்திகள் :
பார்க்க : அபூதாவூத்-1299 .
4 . அபூ ராஃபிஉ (ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க : திர்மிதீ-482 .
5 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள் :
பார்க்க : ஹாகிம்-1196 .
சமீப விமர்சனங்கள்