தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-6009

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

6009. ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் (36 வது அத்தியாயம்) யாஸீன் ஆகும். இதை ஒருவர் ஓதினால் முழுகுர்ஆனையும் ஓதியவரைப் போன்றவராவார்.

ஒருவர் அல்காஃபிரூன் எனத் தொடங்கும் (109 வது) அத்தியாயத்தை ஓதினால் அது குர்ஆனில் நான்கில் ஒரு பங்குக்கு நிகராகும். இதா ஸுல்ஸிலத் எனத் தொடங்கும் (99 வது அத்தியாயத்தை ) ஓதினால் அது குர்ஆனில் பாதிக்கு நிகராகும் என ஒரு மனிதர் எனக்கு அறிவித்தார்.

அறிவிப்பவர்: (ரஹ்)

மஃமர் (ரஹ்)

معمر بن راشد

இறப்பு: ஹி-154

தரம்: மிகப் பலமானவர், என்றாலும் இவர் சிலரிடமிருந்து அறிவிக்கும் செய்திகளை சரியாக மனனமிடவில்லை.


இயற்பெயர்: மஃமர்

தந்தை பெயர்: ராஷித்

புனைப்பெயர்: அபூஉர்வா

ஊர் பெயர்: யமன், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி-96.

இறப்பு: ஹிஜ்ரி-154.

கால கட்டம்: 7.


இவர் ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களில் ஒருவர். ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களான மாலிக் இமாம், ஸுஃப்யான் பின் உயைனா ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் மஃமர் என்று யஹ்யா பின் ஸயீத் அவர்கள் கூறியுள்ளார். இவ்வாறு ஸுஹ்ரீ அவர்களின் மாணவர்களை முதல் தரத்திலிருந்து கடைசி தரம் வரை வகைப்படுத்துவதில் சில அறிஞர்களிடம் மாற்றுக் கருத்தும் உள்ளது.

ஈராக்வாசிகளிடமிருந்து மஃமர் அறிவிக்கும் செய்திகளில் விமர்சனம் உள்ளது. ஆனால் ஈராக்வாசிகளான ஸுஹ்ரீ, அப்துல்லாஹ் தாவூஸ் ஆகியோரிடமிருந்து மஃமர் அறிவிப்பவை சரியானது என்று இப்னு மயீன் கூறியுள்ளார். புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இந்த வகை அறிவிப்பாளர்தொடரை பதிவு செய்துள்ளனர்.

ஸுஹ்ரீ, அப்துல்லாஹ் தாவூஸ், ஹம்மாம் பின் முனப்பிஹ் ஆகியோரிடமிருந்து மஃமர் அறிவிப்பவை சரியானவை.


முஸ்லிமில் இடம்பெறும் இரு செய்திகளைத் தவிர மஃமர் அவர்கள் ஸாபித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் விமர்சனம் உள்ளது என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்...


ஸாபித், ஹிஷாம் பின் உர்வா, ஆஸிம் பின் அபுன்னுஜூத் ஆகியோரிடமிருந்து மஃமர் அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை...


ஆய்வுக்காக: மஃமர் - ஸாபித் குறித்து அல்பானி அவர்களின் தகவல்.


இஸ்ஹாக் அத்தபரீ என்பவரின் நூல்: ஹதீஸு இஸ்ஹாக் தபரீ.


عَنْ مَعْمَرٍ قَالَ: سَمِعْتُ رَجُلًا يُحَدِّثُ

أَنَّ لِكُلِّ شَيءٍ قَلْبٌ وَقَلْبُ الْقُرْآنِ يس وَمَنْ قَرَأَهَا فَإِنَّهَا تَعْدِلُ الْقُرْآنَ – أَوْ قَالَ: تَعْدِلُ قِرَاءَةَ الْقُرْآنِ كُلِّهِ – وَمَنْ قَرَأَ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ فَإِنَّهَا تَعْدِلُ رُبْعَ الْقُرْآنِ، وَإِذَا زُلْزِلَتْ شَطْرَ الْقُرْآنِ


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-6009.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில், மஃமர் (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தவர் யாரென்ற குறிப்பு இல்லையென்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-2887 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.