ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நான் ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது எனது மேலாடையையும், பிறகு சட்டையையும், பிறகு கீழாடையையும் கரித்து பிறகு எனது சருமம்வரை சென்றடைவதானது, நான் ஒரு முஸ்லிமான மனிதரின் அடக்கத்தலத்தின் (கப்று)மீது உட்காருவதைவிட எனக்கு விருப்பமானதாகும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: ஸைத் பின் அஸ்லம் (ரஹ்)
(musannaf-abdur-razzaq-6511: 6511)عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
«لِأَنْ أَجْلِسَ عَلَى جَمْرَةٍ فَتَحْرِقَ رِدَائِي، ثُمَّ قَمِيصِي، ثُمَّ إِزَارِي، ثُمَّ تُفْضِي إِلَى جِلْدِي أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَجْلِسَ عَلَى قَبْرِ رَجُلٍ مُسْلِمٍ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-6511.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-6343.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16418-ஸைத் பின் அஸ்லம் அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.கூறியுள்ளார்
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/658, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/139)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: முஸ்லிம்-1767 .
சமீப விமர்சனங்கள்