உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பார்கள். (அதற்கு காரணம்)
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பதை விடமாட்டார்கள். “இந்த இரண்டு நாட்களில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் அவ்விரண்டிலும் நற்செயல் உள்ள நிலையில் எனது செயல்கள் சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகிறேன் என்று (அதற்கு காரணம்) கூறினார்கள்.
இதை எனக்கு (அபூஹுரைரா (ரலி) —> உஸமா பின் ஸைத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்) ஸயீத் அல்மக்புரீ அவர்கள் அறிவித்ததை செவியேற்றேன் என ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் அறிவித்தார் என்று உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மதீனாவை சேர்ந்த ஒருவர்
(musannaf-abdur-razzaq-7917: 7917)عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ الْمَدِينَةِ
أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ كَانَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ قَالَ: وَأَخْبَرَنِي شَيْخٌ مِنْ غِفَارٍ أَنَّهُ، سَمِعَ سَعِيدًا الْمَقْبُرِيَّ، يُحِدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَتْرُكُ صَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ وَقَالَ: «إِنَّهُمَا يَوْمَانِ تُعْرَضُ فِيهِمَا الْأَعْمَالُ فَأُحِبُّ أَنْ يُعْرَضَ لِي فِيهِمَا عَمَلٌ صَالِحٌ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-7917.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-7706.
- இதன் அறிவிப்பாளர்தொடரில், உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் மதீனாவைச் சேர்ந்த ஒரு மனிதரும், ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரும் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-2436 .
சமீப விமர்சனங்கள்