“வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” எனஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என அவர்களிடம் கேட்கப்பட்டது.
அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும் தான். ஆனால் “அவர் வீரமரணம் அடைந்தாலே தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என என் தந்தை தர்ரு பின் அப்துல்லாஹ் (ரஹ்) கூறினார்.
அறிவிப்பவர்: உமர் பின் தர்ரு (ரஹ்)
உமர் பின் தர்ரு (ரஹ்) கூறியதாவது:
நான் இந்த செய்தியை முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் கூறியபோது அவர்கள்,
“வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என அவர்களிடம் கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும் தான். ஆனால் “தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தெரிவித்தார்கள்.
(musannaf-abdur-razzaq-8118: 8118)أَخْبَرَنَا أَبُو سَعِيدٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادِ بْنِ بِشْرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو يَعْقُوبَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَبَّادٍ الدَّبَرِيُّ قَالَ: قَرَأْنَا عَلَى عَبْدِ الرَّزَّاقِ، عَنْ عُمَرَ بْنِ ذَرٍّ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا مِنْ عَمَلٍ أَفْضَلُ مِنْ عَمَلٍ فِي الْعَشْرِ مِنْ ذِي الْحِجَّةِ»، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ مَا لَمْ تَبْلُغْ قَتْلًا»
قَالَ عمَرٌ: فَذَكَرْتُ ذَلِكَ لِمُجَاهِدٍ، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَمَلٍ أَفْضَلُ مِنْ عَمَلٍ فِي الْعَشْرِ»، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، مَا لَمْ يَخْرُجْ رَجُلٌ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَا يَرْجِعُ مِنْ ذَلِكَ بِشَيْءٍ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-8118.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-7899,
7900.
சமீப விமர்சனங்கள்