பாடம் : 11
அய்யாமுத் தஷ்ரீக் (எனும் துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்களில் நற்செயல் (வழிபாடு)கள் புரிவதன் சிறப்பு.
(22:28ஆவது வசனத்தில்) குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்வார்கள் என்பதிலுள்ள குறிப்பிட்ட நாட்கள் என்பது (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களைக் குறிக்கும். எண்ணப்பட்ட நாட்கள் என்பது அய்யாமுத் தஷ்ரீக் நாட்களைக் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
இப்னு உம்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களிலும் கடை வீதிக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். அவர்கள் இருவரும் தக்பீர் சொல்லும் போது மக்களும் அவர்களுடன் தக்பீர் சொல்வார்கள். நஃபிலான தொழுகைக்குப் பிறகும் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் தக்பீர் சொன்னார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அறப்போரை விடவுமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும்தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று சொன்னார்கள்.
Book : 13
(புகாரி: 969)بَابُ فَضْلِ العَمَلِ فِي أَيَّامِ التَّشْرِيقِ
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ: أَيَّامُ العَشْرِ، وَالأَيَّامُ المَعْدُودَاتُ: أَيَّامُ التَّشْرِيقِ ” وَكَانَ ابْنُ عُمَرَ، وَأَبُو هُرَيْرَةَ: «يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ العَشْرِ يُكَبِّرَانِ، وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا» وَكَبَّرَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ خَلْفَ النَّافِلَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُسْلِمٍ البَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ
«مَا العَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ؟» قَالُوا: وَلاَ الجِهَادُ؟ قَالَ: «وَلاَ الجِهَادُ، إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ»
Bukhari-Tamil-969.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-969.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : புகாரி-969 , அஹ்மத்-1968 , 1969 , 3139 , 3228 , தாரிமீ-1814 , 1815 , திர்மிதீ-757 , அபூதாவூத்-2438 , இப்னு மாஜா-1727 ,
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-5446 . …
..முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-8119 ,
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-758 , அஹ்மத்-6505 , முஸ்லிம்-2623 , அபூதாவூத்-2437 ,
مَا الْعَمَلُ فِي أَيَّامِ الْعَشْرِ أَفْضَلَ مِنَ الْعَمَلِ فِي هَذِهِ
العشر என்ற வார்த்தை விடுபட்டுள்ளது
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த ஹதீஸ் மேற்கண்ட பிரதியில், இந்த எண்ணில்
«مَا العَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ؟» قَالُوا: وَلاَ الجِهَادُ؟ قَالَ: «وَلاَ الجِهَادُ، إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ»
இப்படித்தான் உள்ளது. இது தான் சரியானது என்றும், நீங்கள் குறிப்பிடுவது போல் இடம்பெற்றுள்ள கரீமா எனும் பிரதியில் இருப்பது தவறு என்றும் இப்னு ஹஜர் குறிப்பிட்டுள்ளார்.
صحيح البخاري – ط الشعب (2/ 24)
(1) قال ابن حَجَر : وَقَع في رواية كريمة ، عن الكشميهني : “ما العملُ في أيامِ العَشْر ، أفضلُ من العمل في هذه” ، والسياق الذي وقع في رواية كريمة شاذ مخالف لما رواه أبو ذر وهو من الحفاظ عن الكشميهني ، شيخ كريمة بلفظ : “ما العمل في أيام أفضل منها في هذا العشر”. “فتح الباري” 2/459.
புரிந்தது உதவியதற்கு நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கும் அருள் புரிவானாக!
//இப்னு உம்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களிலும் கடை வீதிக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். அவர்கள் இருவரும் தக்பீர் சொல்லும் போது மக்களும் அவர்களுடன் தக்பீர் சொல்வார்கள். //
ஒரு சந்தேகம் சகோதரரே
இந்த செய்தியில் சப்தமாக கூட்டாக தக்பீர் சொல்வதை தானே குறிக்கிறது?. விளக்கம் தேவை
அஸ்ஸலாமு அலைக்கும். இந்தச் செய்தியில் நபித்தோழர்கள் தக்பீர் கூறியது சத்தமாகத்தான் என்று தெளிவாக தெரிகிறது. என்றாலும் இது நபித்தோழரின் செயல் என்பதால் சிலர் ஆதாரமாக ஏற்பதில்லை.
தங்களின் விளக்கத்திற்கு நன்றி… ஆனால் இந்த தலைப்பில் புகாரி இமாம் கீழ்காணும் செய்தியில் ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள் என்று வருகிறது பெண்களுடன் சேர்ந்து சப்தமாக சொன்னால் தானே இப்படி சொல்லமுடியும்,?
உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
ஸஹீஹ் புகாரி : 971.
அஸ்ஸலாமு அலைக்கும்.
فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ، وَيَدْعُونَ بِدُعَائِهِمْ
இதில் கூறும் தக்பீர் சப்தம் இல்லாமல் கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. காரணம் இதை அடுத்து வரும் வார்த்தை பிரார்த்தனை பற்றியது. இதற்கும் இதே போன்ற வார்த்தை அமைப்பு உள்ளது. பெருநாளில் துஆவை சத்தமாக செய்யக்கூடாது என்பது உங்களின் கருத்தா சத்தமாக செய்யலாம் என்பது உங்கள் கருத்தா என்பதைப் பொருத்தே இது பொருந்திப் போகும்.
நல்லது சகோ,
துஆவை சப்தமாக கேட்ககூடாது என்பதே எனது நிலை, ஆனால் துஆ கேட்கும் போது அனைவரும் கையை உயர்த்தி இருப்பதை வைத்து நாம் துஆ கேட்கிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம், ஆனால் தக்பீரை சப்தமாக சொன்னால் மட்டுமே சேர்ந்து சொல்வது தெரியும். எனது இந்த புரிதல் சரியா ஜி?
பெருநாளில் தக்பீர் கூற வேண்டும், துஆ செய்ய வேண்டும் என்பதற்கு வேறு சான்றுகள் இருக்கும் போது கையை உயர்த்தினால் மட்டுமே துஆ செய்வது தெரியும் என்று எப்படி சொல்கிறீர்கள்? . தொழுகை, பெருநாள் உரைக்குப் பின் துஆ செய்யவேண்டும் என்று மார்க்கம் தெரிந்த அனைவரும் புரிந்தே உள்ளார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்,சகோ
ஜி எனது சந்தேகம் தக்பீர் சப்தமாக சொல்வதாகவே ஹதீஸ்களில் வருகிறது.
ஆனால் மனதிற்குள் சொல்லவேண்டும் என்று சொல்கிறார்கள். அதைதான் ஜி கேட்டேன் . தக்பீரை மனதிற்குள் சொல்லவேண்டும் என்று ஹதீஸ் உள்ளதா?
முஹம்மத் இப்னு அபீ பக்ர் அஸ்ஸஃபீ அறிவித்தார்.
நாங்கள் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது அனஸ்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களுடன் நீங்கள் எவ்வாறு தல்பியா கூறிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டேன்;. அதற்கவர்கள் ‘தல்பியா கூறியவர்கள் தல்பியா கூறினர்; அது ஆட்சேபிக்கப் படவில்லை தக்பீர் கூறியவர் தக்பீர் கூறினர்; அதுவும் ஆட்சேபிக்கப் படவில்லை’ என்று விடையளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 970.
வ அலைக்கும் ஸலாம்.
நீங்கள் கூறிய செய்தி ஹாஜிகள் கூறும் தக்பீர், தல்பியா வாகும். ஹதீஸில், பெருநாளில் இவ்வாறு தக்பீர் சத்தமாக கூறினார்கள் என்று இடம்பெறவில்லை. பாடத்தலைப்பில் உள்ள செய்திகளுக்கு அறிவிப்பாளர்தொடர் இல்லை.