தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2623

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 79

ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை.

அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். “இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 15

(முஸ்லிம்: 2623)

79 – بَابٌ فِي فَضْلِ الْحَجِّ وَالْعُمْرَةِ، وَيَوْمِ عَرَفَةَ

حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالَا: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ يُونُسَ بْنَ يُوسُفَ، يَقُولُ: عَنِ ابْنِ الْمُسَيِّبِ، قَالَ: قَالَتْ عَائِشَةُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ، مِنْ يَوْمِ عَرَفَةَ، وَإِنَّهُ لَيَدْنُو،

ثُمَّ يُبَاهِي بِهِمِ الْمَلَائِكَةَ، فَيَقُولُ: مَا أَرَادَ هَؤُلَاءِ؟


Muslim-Tamil-2623.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-1348.
Muslim-Alamiah-2402.
Muslim-JawamiulKalim-2410.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்

2 . ஹாரூன் பின் ஸயீத்; 3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஈஸா

4 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்

5 . மக்ரமா பின் புகைர்

6 . புகைர் பின் அப்துல்லாஹ்

7 . யூனுஸ் பின் யூஸுஃப்

8 . ஸயீத் பின் முஸய்யிப்

9 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-43937-மக்ரமா பின் புகைர் அவர்கள் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பலவீனமானவர்; இவர் தனது தந்தையிடம் நேரடியாக ஹதீஸைக் கேட்கவில்லை. அவரின் நூலிலிருந்து தான் ஹதீஸை அறிவிப்பவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்.

الكامل في ضعفاء الرجال (8/ 176):
حَدَّثَنَا ابن أبي بُكَير، حَدَّثَنا عباس سمعت يَحْيى يقول مخرمة بن بُكَير ضعيف.
حَدَّثَنَا ابن حماد، حَدَّثَنا عَبَّاس ومعاوية جميعا، عَن يَحْيى، قَالَ: مخرمة بْن بُكَير ضعيف الحديث.
وفي موضعٍ آخر مخرمة بْن بُكَير ليس حديثه بشَيْءٍ ‌يقولون ‌إن ‌حديثه، عن أَبِيهِ كتاب

(நூல்கள்: அல்காமிலு ஃபீ ளுஅஃபாஇர் ரிஜால்-8/176, அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/363)

இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியபின் இந்த கருத்தைக் கூறியிருப்பதால் இதுதான் காரணமாக இருக்கலாம்.

மற்ற அதிகமான அறிஞர்கள் இவரை பலமானவர் என்று கூறியுள்ளனர்.


الجرح والتعديل لابن أبي حاتم (8/ 363):
نا عبد الرحمن نا محمد بن حمويه بن الحسن قال سمعت أبا طالب قال
سألت احمد بن حنبل عن مخرمة بن بكير فقال: هو ثقة، لم يسمع من ابيه شيئا انما يروى عن كتاب ابيه

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள், இவர் பலமானவர் என்றும்; இவர் தனது தந்தையிடமிருந்து ஹதீஸ்களை நேரடியாக கேட்கவில்லை. இவர் தனது தந்தையிடமிருந்து அறிவிப்பது நூலிலிருந்து தான் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/363)


மக்ரமா தனது தந்தையிடம் செவியேற்றாரா? இல்லையா? என்பதைப் பற்றி இருவகையான தகவல்கள் வந்துள்ளன.

1 . ஒரு அறிவிப்பில் அவர், நான் எனது தந்தையிடம் செவியேற்கவில்லை. அவரின் நூலிலிருந்து தான் அறிவிக்கிறேன் என்று கூறியதாக வந்துள்ளது.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/364, அல்காமிலு ஃபீ ளுஅஃபாஇர் ரிஜால்-8/176)…

2 . மற்றொரு அறிவிப்பில் எனது தந்தையிடம் செவியேற்றேன் என்று அவர் சத்தியமிட்டுக் கூறியதாக வந்துள்ளது.

(நூல்கள்: அல்மஃரிஃபது வத்தாரீக்-1/663, அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/364)


சிலர் இரண்டாவது தகவலை பலவீனம் என்றே கருதுகின்றனர்.

ஹதீஸை ஆசிரியரிடமிருந்து கேட்கும் முறைகள், அறிவிக்கும் முறைகள் பல உள்ளன. இவற்றில் எதை ஏற்கலாம்; எவற்றை ஏற்கக் கூடாது என்று ஹதீஸ்கலை நூல்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

ஒருவர் மற்றொருவரின் நூலிலிருந்து அறிவித்தால் அது முன்கதிஃ-அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்தது என்று சில அறிஞர்களும்; நூலில் எந்த மாற்றங்களும் நிகழாத போது அதிலிருந்து அறிவிப்பது முத்தஸில்-அறிவிப்பாளர்தொடர் சரியானது தான் என்று சில அறிஞர்களும் கூறுகின்றனர். (இந்த வகைச் செய்திகளும் சில அறிஞர்களிடம் ஆதாரத்திற்கேற்ற செய்திதான் என்பதால் தான்) முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் இதை பதிவு செய்துள்ளார்.

எனவே இந்தச் செய்தியில் இதைத் தவிர வேறு பலவீனம் இல்லை என்பதால் இது சரியான செய்தியாகும்.

  • மேற்கண்ட செய்தியுடன், சில வார்த்தைகள் கூடுதலாக வருவதை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் பலவீனமானது என்று கூறியுள்ளார்…

(நூல்: அஸ்ஸஹீஹா-2551)


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-2623 , இப்னு மாஜா-3014 , குப்ரா நஸாயீ-3982 , நஸாயீ-3003 , இப்னு குஸைமா-2827 , அல்முஃஜமுல் அவ்ஸத்-9134 , தாரகுத்னீ-2792 , ஹாகிம்-1705 , குப்ரா பைஹகீ-9480 ,

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-8047 .

3 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-7089 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-758 , புகாரி-969 , அஹ்மத்-6505 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.